Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகரிஷி பதஞ்சலி முனிவரையும், யோகாவின் சிறப்புக்களையும் போற்றும் சம்ஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்


மகரிஷி பதஞ்சலி முனிவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், யோகாவின் சிறப்புமிக்க நன்மைகளை எடுத்துரைக்கும் வகையிலும்,  சம்ஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்து கொண்டுள்ளார். யோகக்கலையை தொடர்ந்து பயிற்சி செய்வது, உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் சீராகப் பராமரிக்க  உதவிடும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். யோகப் பயிற்சியை அன்றாட வழக்கமாக மேற்கொள்வதன் மூலம், சமச்சீரான வாழ்வியல் முறையையும், உற்சாகத்தையும் பெறமுடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

தியானத்தில் சிறந்து விளங்கும் மகரிஷி பதஞ்சலி முனிவரை கையெடுத்து வணங்குகிறேன். யோகக்கலையின் மூலம், மனதில் உள்ள மாசுவையும், இலக்கணத்தின் மூலம், சொற்களில் உள்ள பிழைகளையும், ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் உடல் ஆரோக்கியக் குறைபாடுகளையும் களைந்தவர்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268724&reg=3&lang=1

***

SS/SV/KPG/SH