Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாத்மா அய்யன்காளியின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மரியாதை


சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பின் நீடித்த சின்னமாக மகாத்மா அய்யன்காளியை நினைவுகூர்ந்து, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மனமார்ந்த மரியாதையைச் செலுத்தியுள்ளார். கல்வி மற்றும் சமத்துவத்திற்கான மகாத்மா அய்யன்காளியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை திரு  மோடி எடுத்துரைத்துள்ளார்.  அவரது மரபு மற்றும் பாரம்பரியம்,  நாட்டின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்தை நோக்கிய கூட்டுப் பயணத்தைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“மகாத்மா அய்யன்காளியின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு மரியாதை  செலுத்துகிறேன். சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பின் சின்னமாக அவர் நினைவுகூரப்படுகிறார். அறிவு மற்றும் கற்றலில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவரது முயற்சிகள் ஒரு நீதி மற்றும் சமத்துவமான சமூகத்தை நோக்கி பாடுபட தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்.”

***

(Release ID: 2161514)

AD/PKV/KR