Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். மகாத்மா காந்தியின் சிந்தனைகள் உலகம் முழுவதற்கும் உத்வேகம் அளித்துள்ளன என்றும், அந்த சிந்தனைகளின் ஓட்டம் மனிதநேயத்துடன் எப்போதும் பொருத்தமானவையாக இருப்பதாகவும் திரு மோடி நரேந்திர கூறியுள்ளார்.

 

சுதேசி கொள்கைகளைப் பின்பற்றுவதில் மகாத்மா காந்தி காட்டிய முக்கியத்துவத்தையும், அவற்றுள் காதி முதன்மையானது என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அக்டோபர் 2-ம் தேதியன்று குறைந்தபட்சம் ஒரு காதிப் பொருளையாவது வாங்கி, அதை சுதேசி தயாரிப்பு என்று பெருமையுடன் கூறுமாறு திரு நரேந்திர மோடி மக்களை வலியுறுத்தியுள்ளார். மேலும், காந்திஜியின் காலத்தால் அழியாத செய்தி, ஒரு சிறந்த சமுதாயத்தை நோக்கியும், வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கியும் தொடர்ந்து வழிநடத்தும் என்ற நம்பிக்கையையும் பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார்.

 

“மகாத்மா காந்தியின் காலத்தால் அழியாத கொள்கைகள், சிறந்த சமூகத்தையும் வளர்ச்சியடைந்த பாரதத்தையும் நோக்கி நம்மைத் தொடர்ந்து வழிநடத்தட்டும்.” என்று கூறியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, காந்தி ஜெயந்தி தொடர்பான வீடியோ ஒன்றையும் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

 

(Release ID: 2318023)

****

TV/PLM/SH