Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய அளவிலான கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இயக்கத்திற்கு பிரதமர் பாராட்டு


பிரதமர் திரு நரேந்திர மோடி, தேசிய அளவிலான கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இயக்கம், 9 மாதகாலத்திற்குள் ஒரு கோடி எச்பிவி தடுப்பூசி டோஸ்களை வழங்கி வரலாற்று சிறப்புமிக்க சாதனையை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தகுதியுள்ள சிறுமிகளில் சுமார் 87 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தடுப்பு சுகாதாரத்தின் மூலம், இந்தியாவின் புதல்விகளுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதில், இந்த சாதனை முக்கியமான படி என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த இயக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதிசெய்த அனைத்து சம்பந்தப்பட்டவர்களின் கூட்டு அர்ப்பணிப்பையும், ஒருங்கிணைந்த முயற்சிகளையும் இந்த சாதனை பிரதிபலிப்பதாகவும் தெரிவித்தார்.    

இது தொடர்பாக, சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:  

தடுப்பு சுகாதாரத்தை நோக்கிய நமது பயணத்தில், ஒரு குறிப்பிடத்தக்க சாதனை.

ஒவ்வொரு தடுப்பூசியும், பெண் குழந்தைகளை கருப்பை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதிசெய்வதற்கும் எடுக்கப்பட்ட ஒரு படியாகும்.

இந்த வியக்கத்தக்க சாதனையை உறுதிசெய்த அனைவரின் முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2340298&reg=3&lang=1

 

***

SS/LN/GS

Prime Minister shares Sanskrit Subhashitam highlighting essential qualities that sustain prosperity