Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகான் நிரஞ்சன் தாஸை பிரதமர் சந்தித்தார்


ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜ் ஜெயந்தியையொட்டி பல்லனில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் தேரா சச்கண்ட் மகான் நிரஞ்சன் தாஸை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார். சமூகத்திற்கு அவர் ஆற்றிய உத்வேகம் அளிக்கும் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அண்மையில் அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதாக திரு மோடி கூறியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜ் ஜெயந்தியையொட்டி தேரா சச்கண்ட் பல்லனில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மகான் நிரஞ்சன் தாஸைச் சந்தித்தது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

சமூகத்திற்கு அவர் ஆற்றிய உத்வேகம் அளிக்கும் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அண்மையில் அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.”

***

(Release ID: 2221816)

VJ/PKV/IR/RK/SH