Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மகாராஷ்டிரத்தில் வீட்டுவசதி – நகர்ப்புற மேம்பாடு தொடர்பான திட்டங்களைத் தொடங்கிவைத்து பாரதப் பிரதமர் ஆற்றிய உரை

மகாராஷ்டிரத்தில் வீட்டுவசதி – நகர்ப்புற மேம்பாடு தொடர்பான திட்டங்களைத் தொடங்கிவைத்து பாரதப் பிரதமர் ஆற்றிய உரை


இங்கு ஏராளமாகக் கூடியுள்ள எனது அருமை சகோதர சகோதரிகளே!

நாட்டின் கனவுகள் நிறைவேறுவதற்கு நாட்டின் பகுதிகளான மும்பையும் தானேயும் உறுதுணையாக இருந்து வருகின்றன. சிறிய கிராமங்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் வந்துள்ள சாமானிய மக்கள் பலர் இங்கே வளமும் புகழும் பெற்றனர். இங்கேயே பிறந்து, வாழ்பவர்கள் தாராளமனப்பான்மையும் பரந்த எண்ணமும் கொண்டவர்கள். இங்குள்ளவர்கள் அனைவருக்கும் தங்களது மனத்தில் ஓரிடத்தை அளித்துள்ளனர். இந்தியாவின் ஒட்டுமொத்த பன்முகத்தையும் இங்கே காண்பதற்கு இதுதான் காரணம். மும்பைக்கு வருவோர் யாரும் இந்த இடத்துடன் ஐக்கியமாகிவிடுவர். மராத்தி பண்பாட்டின் அங்கமாகிவிடுவர்.

சகோதர சகோததரிகளே,

மும்பை நகரம் இப்போது விரிவடைந்து வருகிறது. அனைத்து மேம்பாடுகளும் இங்கே நடைபெறுகின்றன. அதே சமயம் இங்குள்ள வளங்களையும் பெறுவதற்கான அழுத்தமும் அதிகமாக உள்ளது. அதன் தாக்கத்தை, சாலை, ரயில் உள்ளிட்ட போக்குவரத்திலேயே பார்க்கலாம். இவற்றையெல்லாம் மனத்தில் கொண்டுதான் மும்பை, தானே உள்பட அக்கம்பக்கத்தில் உள்ள பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு கடந்த நான்கு, நான்கரை ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இரு மெட்ரோ ரயில் பாதைகள் உள்பட மொத்தம் ரூ. 33 ஆயிரம் கோடி அளவுக்குப் பல திட்டங்களுக்கான அடிக்கற்கள் இன்று நாட்டப்பட்டுள்ளன. இவற்றுடன், தானேயில் ஏழை, நடுத்தர குடும்பங்களுக்காக 90 ஆயிரம் வீடுகள் இன்று கட்டுவதற்குத் தொடங்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

நாட்டின் நகரத்தின் வளர்ச்சிக்கு, போக்குவரத்து மிக முக்கியமானதாகும். நகர்ப்புறத்தின் விரைவான மேம்பாடு நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, வரும் ஆண்டுகளில் உலகின் அதிவேக மேம்பாடு கொண்டுள்ள நகரங்களின் முதல் 10 இடங்களில் இந்திய நகரங்களும் இடம்பெறப் போகின்றன. நம் நாட்டின் வேகமான வளர்ச்சிக்கு நகரங்களில் வசிக்கும் மக்களின் மேம்பாடும் ஒர் வலுவான அம்சமாகும்.

நமது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் மும்பை எப்போதும் மையமாகவே திகழ்கிறது. எதிர்காலத்தில், அது விரிவடையப் போகிறது. எனவே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பிறகு, கட்டுமானத்தில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டோம்.

மும்பை ரயில்களுக்கு பல கோடிகளை ஒதுக்கியுள்ளோம். பழைய ரயில்நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு, நவீனமாக்கப்பட்டுள்ளன. மும்பை உள்ளூர் போக்குவரத்து மட்டுமின்றி, இதர போக்குவரத்து திட்டங்களும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அவற்றில் மெட்ரோ ரயில் போக்குவரத்து திட்டம் மிகவும் வரவேற்கப்படுகிறது.

தானேயில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை விரிவுபடுத்திய பிறகு, மும்பை, தானே, மற்றும் அண்டை பகுதிகளுக்கு நல்ல போக்குவரத்து இணைப்பு கிடைத்துவிடும்.

நண்பர்களே,

மும்பையில் முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்துத் திட்டம் 2006ம் ஆண்டு வந்தது. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் அத்திட்டம் எங்கே தடைப்பட்டது என்பதைக் கூற இயலவில்லை. முதல் ரயில் தட வழி 2014ம் ஆண்டில் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். அதுவும் 11 கி.மீ. தூரத்திற்குத்தான்! 2014ம் ஆண்டுக்குப் பிறகு மெட்ரோ ரயலுக்கான தண்டவாளத்தையும் வேகத்தையும் அதிகரிக்கத் திட்டமிட்டோம். மும்பை மெட்ரோ ரயில் போக்குவரத்து இணைப்புக்காக, கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டன.

இந்த யோசனையை மனத்தில் வைத்து, மேலும் இரு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்படுகின்றன. அதாவது, அடுத்த மூன்று ஆண்டுகளில் 35 கி.மீ. தூரத்திற்கு மேலும் மெட்ரோ ரயில் இணைப்பு ஏற்படும்.

இவை தவிர, 2022ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையில் மும்பை மக்கள் மொத்தம் 275 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் இணைப்பைப் பெறுவர். இன்று அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் தானே, பிவாண்டி, கல்யாண், தஹிஸர், மிரா பவந்தர் ஆகிய நகர மக்களுக்குப் பயன் தருவதுடன் மும்பை போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும்.

நண்பர்களே,

இந்த வசதிகள் எல்லாம் இன்றைய தேவைகளுக்காக மட்டுமின்றி, 2035ம் ஆண்டுக்கான போக்குவரத்து தேவைகளுக்கும் உதவும்.

சகோதர, சகோதரிகளே,

உங்களது வாழ்க்கை நன்றாகவும் வசதியாகவும் அமைவதற்கு உறுதி செய்வதுடன், ஏழை, நடுத்தர மக்களும் வீடுகள் பெறுவதற்காக உறுதி பூண்டுள்ளோம்.

மத்திய அரசு 2022ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதற்குள் நாட்டில் உள்ள அனைத்துக் குடும்பங்களும் சிமெண்ட் கூரையுடன் கூடிய வீடுகள் கிடைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். அந்த இலக்கை அடைவதற்காக இன்று 90 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் தொடங்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

நமது பணிக் கலாசாரம், மனப்பான்மை மற்றும் வேகம் ஆகியவை முந்தைய அரசை விட மாறுபட்டது. முந்தைய அரசு தனது பதவிக் காலத்தின் கடைசி நான்கு ஆண்டுகளில் மொத்தம் 25,50,000 வீடுகளை மட்டுமே கட்டித் தந்தது. ஆனால், இந்த அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளைக் கட்டித் தந்திருக்கிறது. இது முந்தைய அரசு செய்ததை விட ஐந்து மடங்கு அதிகம். அதாவது, முன்பு இருந்த அரசு இத்தகைய முற்போக்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால், இரண்டு தலைமுறைகள் செயல்பட்டிருக்க வேண்டும்.

பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் (Pradhan Mantri Shahri Awas Yojana) கீழ் மகாராஷ்டிரம் முழுவதும் 8 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

வீடற்றவர்களுக்கு பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் (Pradhan Mantri Awas Yojana) கீழ் நல்ல, அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டு வருகின்றன. ஆனால், அவை முந்தைய அரசுக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய ஆதர்ஷ் சொசைட்டி போல இருக்காது. உண்மையில் சாமானிய ஆண், பெண் கனவுகள் நிறைவேறும் வகையிலும் அவர்கள் நல்ல எதிர்கால மேம்பாடு குறித்த தன்னம்பிக்கை பெறும் வகையிலும் ஆதர்ஷ் அல்லது ஏதாவது சொசைட்டி அமைக்கப்படும்.

ஆதர்ஷ் அல்லது ஏதாவது சொசைட்டி அமைக்கப்பட்டு அதிகபட்சமாக ரூ. 2.5 லட்சம் நமது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். அது கடனுக்காகத் தரப்படுவதால், ஏழை மக்களும் நடுத்தர மக்களும் வீட்டுக் கடன்பெறும்போது ஏற்படும் சுமை குறையும்.

அது மட்டுமின்றி, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதமும் முன்பு இருந்ததை விட கணிசமாகக் குறையும். இத்திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கும் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கும் 6.5 சதவீதம் வட்டியில் சலுகை அரசாங்கத்தால் அளிக்கப்படும்.
நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு 3 முதல் 4 சதவீதம் வட்டியில் மானியம் கிடைக்கும். அதாவது, 20 லட்சம் வீட்டுக் கடனை 20 ஆண்டுகளுக்குத் திருப்பிச் செலுத்துவதற்காகப் பெற்றால், அந்தக் காலக் கட்டத்தில் அவருக்கு அரசிடமிருந்து ரூ. 6 லட்சம் உதவி அளிக்கப்படும்.

நண்பர்களே,

அரசாங்கத்தின் இந்த நேர்மையான நடவடிக்கைகளின் விளைவாக, லட்சக்கணக்கானோர் பதிவு செய்துகொண்டுள்ளனர். கடந்த ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகளில் வீடுகளைப் பெற்றுள்ளனர்.

முந்தை அரசை ஒப்பிடுகையில், கடந்த ஏழு, எட்டு மாதங்களில் புதிதாக வீடு வாங்குவது இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று ஆய்வறிக்கை கூறுகிறது. இன்றைக்குத் தொடங்கப்படும் திட்டமும் அத்தகைய மக்களுக்குப் பெரிதும் துணை புரியும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலத்தில் 85 ஆயிரம் பேர் ரூ. 2000 கோடி உதவி பெற்றுள்ளனர். பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் (Pradhan Mantri Awas Yojana) கீழ் பெற்றுள்ளனர்.

நண்பர்களே,

நடுத்தர மக்களுக்கு நாங்கள் வீடு கிடைக்கச் செய்வது மட்டுமின்றி, அது தொடர்பானவற்றையும் கவனித்துக் கொள்கிறோம்.

வாழ்நாள் சேமிப்பையெல்லாம் போட்டு ஒரு வீடு வாங்குவதற்குள் என்னவெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பது கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இருந்த நிலை உங்களுக்குத் தெரியும். பாரபட்சமாக நடந்து கொள்வோர், கெடுதல் செய்யும் எண்ணத்துடன் இருப்போர் காரணமாக அப்போதெல்லாம் ஒரு வீட்டினை வாங்குவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும்.

சில சமயம் (வீடு கட்டித் தருவதில்) சொல்லப்படுவது போல் வாக்குறுதி நிறைவேற்றப்படாமல், அதற்கு நேர்மாறாகச் செய்யப்படுவதுண்டு. இந்த அரசு இத்தகைய போக்கைத் தடுத்து அரும்பாடுபட்டு நிறுத்தியுள்ளது.

இன்று ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையகம் (Real Estate Regulatory Authority) பல மாநிலங்களில் நடைமுறைக்கு வந்துவிட்டது. அத்துடன் 21 மாநிலங்களில் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டுவிட்டன.

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையகத்தை முதலில் அமைத்துள்ள மாநிலம் மகாராஷ்டிரம் என்ற முறையில் முதலமைச்சர் ஃபட்நவீஸைப் பாராட்டுகிறேன். கிட்டத்தட்ட 35 ஆயிரம் ரியல் எஸ்டேட் திட்டங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 27 ஆயிரம் ரியல் எஸ்டேட் முகவர்கள் பதிவு செய்து கொண்டுள்ளனர். அவற்றில் அதிகமான திட்டங்கள் பதிவான மாநிலம் மகாராஷ்டிரம் என்பது குறிப்பிடத் தக்கது.

நண்பர்களே,

கடந்த 70 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் எந்தவித உறுதியான சட்டமும் இல்லாமல் செயல்பாட்டில் இருந்து வந்துள்ளது என்பதை நினைத்துப் பாருங்கள். இதைப் போன்ற சட்டங்களை முந்தைய அரசு இயற்றியிருந்தால், வீடுகளை வாங்குவோர் நீதிமன்றங்களின் படிகளை ஏறி இறங்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது. ரியல் எஸ்டேட் தொழிலில் வெளிப்படைத் தன்மை நிலவியிருக்கும்.

சகோதர, சகோதரிகளே,

ஏழைகள், நடுத்தர வருவாய்ப் பிரிவினரின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கு அரசு இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்காக நாடு முழுவதும் உஜாலா திட்டத்தின் (UJALA scheme) கீழ் 30 எல்இடி பல்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டேகால் கோடி பல்புகள் மகாராஷ்டிர மாநிலத்தில் வழங்கப்பட்டுள்ளன. அதில் தானே நகரில் மட்டும் லட்சக்கணக்கான பல்புகள் வழங்கப்பட்டுவிட்டன. 60 வாட் மின்சாரம் கொண்ட பல்பு அளிக்கும் ஒளியை 7 முதல் 8 வாட் பல்புகளால் அளிக்க இயலவில்லை. அதாவது, மின்சாரப் பயன்பாடும் குறைந்து, மின்சார பில்லும் கணிசமாகக் குறையும்.

இத்திட்டத்தின் துணையுடன் நாட்டில் உள்ள பல குடும்பங்கள் ஆண்டுதோறும் சுமார் ரூ. 16 ஆயிரம் கோடியைச் சேமிக்க இயல்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் ஆண்டுக்கு ரூ. 1100 கோடி மின் கட்டணம் மிச்சப்படுத்தப்படுகிறது.

ஓர் இயக்கத்தைப் போல் எல்இடி பல்புகளை வழங்கியதன் மூலமே இது சாத்தியமானது. அத்துடன், எல்இடி பல்புகளை ஆலைகளும் அதிக அளவு உற்பத்தி செய்கின்றன. இடைத்தரகர்களும் குறைக்கப்பட்டனர். இதன் விளைவாக, கடந்த நான்கு ஆண்டுக்கு முன் ரூ. 250 முதல் ரூ. 300 ஆக இருந்த எல்இடி பல்புகளின் விலை ரூ. 50 ஆகக் குறைந்துள்ளது.

நண்பர்களே,

‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்’ (Sabka Sath Sabka Vikas) கோட்பாட்டின் பாதையில் மத்திய அரசு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. நாட்டில் மேம்பாடு அடையாத ஒரு கிராமமோ ஒரு நகரமோ யாருமோ இருக்கக் கூடாது என்ற நிலைக்காக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

உஜ்வாலா திட்டத்தின் (Ujjwala scheme) கீழ் நாடு முழுவதும் இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இதுவரை, ஆறு கோடி பேருக்கு எரிவாயு இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில் 34 லட்சம் பேர் தானே உள்பட மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

நண்பர்களே,

அழகு நிலையம், தையல் தொழில், நெசவுத் தொழில், கைவினைப் பொருள் உற்பத்தி ஆகிய சிறிய தொழில்களில் ஈடுபட விரும்பும் சகோதரிகளுக்குக் கடனுதவி அளிப்பதற்கு வங்கிகளின் கதவுகள் திறந்திருக்கின்றன. முத்ரா திட்டத்தின் (MUDRA Yojana) கீழ் எந்தவித பிணையும் இல்லாமல், ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ. 10 லட்சம் வரையில் கடனுதவி அளிக்கப்படுகின்றன. மகாராஷ்டிரத்தில் சுமார் ரூ. 1 கோடியே 25 லட்சம் பேருக்குக் கடனுதவி அளிக்கப்பட்டுள்லது. அதில் ஒரு கோடிப் பேர் பெண்கள் ஆவர்.

சகோதர, சகோதரிகளே,

ஏழைகளுக்கும், பெண்களுக்கும் கண்ணியமான வாழ்க்கையைத் தருவதுதான் எங்களது குறிக்கோள் ஆகும். குழந்தைகளுக்குக் கல்வி, இளைஞர்களுக்கு வருவாய், முதியோருக்கு மருந்துகள், விவசாயிகளுக்குப் பாசனம், பொதுமக்களின் குறைதீர்ப்பு மேம்பாட்டுக்கான ஆகிய ஐந்து வழிகளுக்காக அரசு அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.

நிறைவாக, மேம்பாட்டுக்கான புதிய திட்டங்களை அடைய இருக்கும் உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். உங்களது ஆசிகளை வழங்குவதற்காக மிகப் பெரிய அளவில் திரண்டு இங்கு வந்து கூடியிருப்பதற்காக நன்றி கூறுகிறேன்.

இங்கிருந்து புனே செல்ல இருக்கிறேன். அங்கு பல்லாயிரம் கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைக்க இருக்கிறேன். இங்கே மிகப் பெரிய அளவில் கூடி மிகப் பெரிய தெம்பினஐ அளித்துள்ளதற்காக பாராட்டுகிறேன்.

அனைவருக்கும் நன்றி!

******