Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்தியப் பிரதேசத்தில் நிலவும் வறட்சி மற்றும் நீர்த் தட்டுப்பாடு குறித்து, மத்தியப் பிரதேச முதல்வரோடு உயர்நிலை கூட்டத்தில் பிரதமர் ஆய்வு

மத்தியப் பிரதேசத்தில் நிலவும் வறட்சி மற்றும்  நீர்த் தட்டுப்பாடு குறித்து, மத்தியப் பிரதேச முதல்வரோடு உயர்நிலை கூட்டத்தில் பிரதமர் ஆய்வு


மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் நிலவும் வறட்சி மற்றும் நீர்த் தட்டுப்பாடு குறித்து, பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மத்தியப் பிரதேச முதல்வரோடு உயர்நிலை கூட்டத்தில் ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் மத்தியப் பிரதேச முதல்வர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் அவர்கள் கலந்து கொண்டார். மத்தியப் பிரதேசம் மற்றும் மத்திய அரசின் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

விவாதத்தை தொடங்கி வைத்த பிரதமர், வறட்சியால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களோடும் அவர்கள் மாநிலத்தின் குறிப்பான தேவைகள் குறித்து ஆராய்வதற்காகவும், குறுகிய கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காகவும் தனித்தனியே சந்திப்புகளை நடத்துவதாக பிரதமர் தெரிவித்தார்.

தேசிய பேரிடர் பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ.1875.80 கோடி, வழங்கப்பட்டுள்ளது. மாநில தேசிய பேரிடர் பாதுகாப்பு நிதிக்கு 2015-16ம் ஆண்டுக்காக அளிக்கப்பட்ட ரூ.657.75 கோடி அல்லாமல் இத்தொகை தற்போது வழங்கப்பட்டுள்ளது. 2016-17ம் ஆண்டுக்கான முதல் தவணையாக மாநில பேரிடர் பாதுகாப்பு நிதிக்கு ரூ.345.375 கோடி வழங்கப்பட்டுள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களோடு ஆலோசனை கூட்டம் நடத்தும் பிரதமரின் முயற்சிகளுக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார். வறட்சி நிவாரணம் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை பிரதமருக்கு விளக்கிய முதலமைச்சர் வறட்சி நிவாரணமாக 61 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.4664 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இது வரை மத்தியப் பிரதேசத்தின் வரலாற்றிலேயே இதுதான் அதிகமாக வழங்கப்பட்ட வறட்சி நிவாரணம் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த பத்தாண்டுகளாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், மாநில அரசு வறட்சியை சிறப்பாக கையாண்டதாக முதலமைச்சர் தெரிவித்தார். நீர் தேக்கத்திற்கான ஏற்பாடகளை செய்தது இந்நடவடிக்கைகளில் ஒன்று. இரண்டாவது ஆண்டாக மழை பொய்த்த பின்னரும் 113 கிராமங்களுக்கு மட்டுமே தண்ணீர் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது என்றார். இந்த ஆண்டு இறுதி வரை மழை பெய்யாவிட்டாலும் கூட மொத்தம் உள்ள 50,000 கிராமங்களில் 400 கிராமங்களுக்கு மட்டுமே தண்ணீர் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றார். பிரதமரின், பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசனத் திட்டம் முக்கிய இடமளிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்ககளையும் முதலமைச்சர் விவரித்தார்.
சிறு பாசனம், திரவ உரம் பயன்பாடு, விண்வெளி தொழில்நுட்பம் பயன்படுத்துதல், குளங்களை உருவாக்குதல் போன்ற விவசாயத்துக்கான திட்டங்கள் குறித்து பிரதமர் மற்றும் முதலமைச்சர் விவாதித்தனர்.

நீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, இளைஞர் அமைப்புகளான என்.சி.சி., என்.எஸ்.எஸ்., என்.ஒய்.கே.எஸ்., ஸ்கவுட்டுகள் மற்றும் கைடுகள் போன்ற அமைப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரதமரும் முதலமைச்சரும் விவாதித்தனர். நர்மதை ஆற்றுப் பகுதியில் மரம் நடுவது குறித்தும், அவற்றை பாதுகாப்பது குறித்தும் இருவரும் விவாதித்தனர்.

மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து பணியாற்றுவது என்ற முடிவோடு கூட்டம் நிறைவுற்றது.