பி.எம்.இந்தியா
மத்தியப் பிரதேசத்தில் மாநில அரசிடமிருந்து பெறப்பட்ட சுமார் 478.307 ஹெக்டேர் நிலத்தை திரும்ப தருவதற்கான திட்டத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மேடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (27.01.2016) ஒப்புதல் அளித்தது. இந்த நிலப்பரப்பில் தனியாரிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட சுமார் 461.607 ஹெக்டேரும் அரசுக்கு சொந்தமான 16.70 ஹெக்டேரும் அடங்கும். மத்திய பிரதேச நாட்ரிப் திட்டத்தில் இந்ததூர் மோட்டார் வாகன சோதனை களத்திற்கான இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 740 கோடியாகும்.
திருப்பி அளிக்கப்பட்ட நிலத்தை மாநில அரசு மோட்டார் வாகன மற்றும் அது சார்ந்த துணைத்தொழில் விரிவுகளுக்கு ஒதுக்கீடு செய்யும். இதனால் தற்போதைய நேட்ராக்ஸ் திட்டம் சோதனைக் களத்துடன் ஒருங்கிணைப்பு விளைவை ஏற்படுத்தும்.