பி.எம்.இந்தியா
மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.07.2016 முதல் மேலும் ஒரு தவணை அக விலைப்படியை வழங்குவதற்கும் ஓய்வூதியதாரர்களுக்கு அக விலை நிவாரணம் வழங்குவதற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதனால் அடிப்படை ஊதியம் அல்லது ஓய்வூதியத்தில் இரண்டு சதவீதம் கூடுதலாக விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையில் வழங்கப்படும். இந்த உயர்வு ஏற்றுக் கொள்ளப்பட்ட 7 – வது மத்திய ஊதியக் குழு பரிந்துரைகள் அடிப்படையிலான முறைகளின்படி கணக்கிடப்பட்டுள்ளது.
அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை காரணமாக மத்திய அரசுக்கு மொத்தம் ஏற்படும் கூடுதல் செலவினம் ஆண்டுக்கு ரூ. 5622.10 கோடியாகும். 2016 -17 ம் நிதி ஆண்டின் 8 மாத காலத்திற்கு அதாவது ஜுலை 2016 முதல் பிப்ரவரி 2017 வரையிலான காலத்துக்கு கூடுதல் செலவினம் ரூ. 3748.06 கோடியாகும். சுமார் 50.68 லட்சம் அரசு ஊழியர்களும் 54.24 லட்சம் ஓய்வூதியதார்ர்களும் இதனால் பயனடைவார்கள்.