Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத கூடுதல் அகவிலைப்படி அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக இரண்டு சதவீத அகவிலைப்படி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதேபோல் ஓய்வூதியதாரர்களுக்கும் இரண்டு சதவீத அகவிலைப்படி நிவாரணம் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் தற்போது 7 சதவீத அகவிலைப்படி அளிக்கப்படுகிறது. இந்த உயர்வு 01.07.2018 முதல் அளிக்கப்பட உள்ளது. விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில் இந்த அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது.

இந்த அகவிலைப்படி உயர்வு காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 6112.20 கோடி கூடுதலாக செலவாகும் என்பதுடன், 2018-19 நிதியாண்டில் ரூ. 4074.50 கோடி (2018 ஜூலை முதல் 2019 பிப்ரவரி வரை) கூடுதலாக செலவாகும்.

இதன் மூலம் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 62.03 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் ஏற்கப்பட்ட விகிதத்தில் இந்த உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

******