Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய ஆயுத காவல் படையினர் மற்றும் அசாம் ரைஃபிள் படையில் உள்ள மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு வயதை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கீழ்க்காணும் வகைகளில், ஓய்வுவயதை உயர்த்த செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அ. மத்திய ஆயுத காவல் படையினர் மற்றும் அசாம் ரைஃபிள் படையில், பணியில் ஈடுபட்டுள்ள (General Duty) மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு வயது 60-லிருந்து 65 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது.

ஆ. மத்திய உள்துறை அமைச்சகத்தின் மத்திய ஆயுத காவல் படையினர் மற்றும் அசாம் ரைஃபிள் படையைச் சேர்ந்த சிறப்பு மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு வயது 60-லிருந்து 65 ஆண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது.

இதன்மூலம், பொது மருத்துவப் பிரிவு (General Duty Medical Cadre) மற்றும் சிறப்பு மருத்துவ அதிகாரிகளை, பணியில் தக்கவைத்துக் கொள்ள முடியும். இது மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பான முறையில் நோயாளிகளை கவனித்துக் கொள்ளவும், உரிய மருத்துவக் கல்வி அளிக்கவும் உதவும். மேலும், மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான தேசிய சுகாதாரத் திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்த முடியும்.