பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்துவா தர்ம மேளாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தச் சிறப்பு நிகழ்வு பூர்ண பிரஹ்ம ஸ்ரீ ஸ்ரீ ஹரிச்சந்த் தாகூர்ஜியின் ஜெயந்தியுடன் தொடர்புடையது. “நான் அவருக்கு எனது பணிவான வணக்கங்களைச் செலுத்துகிறேன். அவரது சிந்தனைகளும் போதனைகளும் பலருக்குத் தொடர்ந்து பலத்தையும் நம்பிக்கையையும் அளித்து வருகின்றன. அவை கண்ணியம், சமத்துவம் மற்றும் பக்தி ஆகியவற்றுக்கான ஒரு சக்திவாய்ந்த இயக்கத்தை எழுச்சியடையச் செய்தன. நீதி, இணக்கம் மற்றும் கூட்டு மேம்பாடு என்ற பாதையில் நடக்க அவர் பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்தார்” என்று திரு மோடி கூறியுள்ளார்.
மத்துவ கலாச்சாரத்தின் வளமான மற்றும் துடிப்பான பாரம்பரியங்கள் ஆழ்ந்த ஆன்மீக வலிமையையும் சமத்துவத்திற்கான மாறாத அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றன என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இது நமது தேசத்தின் சமூக அமைப்பை கணிசமாக வளப்படுத்துகிறது. “கடந்த பத்தாண்டுகளில், மத்துவா சமூகத்தின் நலன், அதிகாரமளித்தல், கண்ணியம் ஆகியவற்றில் எங்கள் அரசு ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது,” என்று திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது :
“மத்துவா தர்ம மேளாவில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.இந்தச் சிறப்பு நிகழ்வு பூர்ண பிரஹ்மா ஸ்ரீ ஸ்ரீ ஹரிச்சந்த் தாகூர்ஜியின் ஜெயந்தியுடன் தொடர்புடையது. அவருக்கு எனது பணிவான வணக்கங்களைச் செலுத்துகிறேன். அவரது சிந்தனைகளும் போதனைகளும் தொடர்ந்து பலருக்கு பலத்தையும் நம்பிக்கையையும் அளித்து வருகின்றன. அவை கண்ணியம், சமத்துவம், பக்தி ஆகியவற்றுக்கான ஒரு சக்திவாய்ந்த இயக்கத்தை எழுச்சியடையச் செய்தன. நீதி, இணக்கம் மற்றும் கூட்டு மேம்பாடு என்ற பாதையில் நடக்க அவர் பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்தார்.
மத்துவா கலாச்சாரத்தின் வளமான மற்றும் துடிப்பான பாரம்பரியங்கள் ஆழமான ஆன்மீக வலிமையையும் சமத்துவத்திற்கான மாறாத அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றன. இது நம் தேசத்தின் சமூக அமைப்பை கணிசமாக மேம்படுத்துகிறது. கடந்த பத்தாண்டுகளில், எங்கள் அரசு மத்துவா சமூகத்தின் நலன், அதிகாரமளித்தல் மற்றும் கண்ணியம் ஆகியவற்றில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.”
***
(Release ID: 2240557)
TV/PKV/KR
My heartfelt greetings and best wishes to all devotees and participants of the Matua Dharma Mela.
— Narendra Modi (@narendramodi) March 16, 2026
This special occasion is associated with the Jayanti of Purna Brahma Shree Shree Harichand Thakur Ji. I offer my humble Pranams to him. His thoughts and teachings continue to give… https://t.co/KcOVKHhNlY
মতুয়া ধর্মমেলায় আগত সমস্ত ভক্ত এবং অংশগ্রহণকারীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
— Narendra Modi (@narendramodi) March 16, 2026
এই বিশেষ তিথিটি পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজির জয়ন্তীর সঙ্গে যুক্ত। আমি তাঁকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। তাঁর আদর্শ এবং শিক্ষা আজও অগণিত মানুষকে শক্তি ও আশার আলো দিয়ে… https://t.co/KcOVKHhNlY