Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மனதின் குரல் நிகழ்ச்சியின் 129 – வது அத்தியாயத்தின் சில முக்கிய அம்சங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி, பகிர்ந்துள்ளார்


மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 129 – வது அத்தியாயத்தின் சில முக்கிய அம்சங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி, பகிர்ந்து கொண்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில், கூறியிருப்பதாவது:

“140 கோடி இந்தியர்களின் வலிமை மற்றும் திறமைகளுக்கு நன்றி, 2025 – ம் ஆண்டில் நமது தேசம் பல்வேறு துறைகளில் சாதனைகளை படைத்துள்ளது.”

#மன்_கி_பாத்

வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த இளைஞர்கள் பங்கேற்கும் கருத்தரங்கு, நாட்டைக் கட்டமைப்பதில் பங்களிப்பதற்கான ஒரு சிறந்த தளமாகும். 2026 ஜனவரி 12 அன்று நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, நமது இளையோர் சக்தியின் நுண்ணறிவு மற்றும் கருத்துக்களை கேட்பதற்கு மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

#மன்_கி_பாத்

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகள், நமது இளைஞர்களுக்கும் புதுமைக் கண்டுபிடிப்பாளர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய மற்றும் சமூக சவால்களுக்குத் தீர்வு காண ஒரு தளத்தை வழங்குகிறது.”

#மன்_கி_பாத்

இந்தியாவின் இளைஞர்கள் நீடித்த வளர்ச்சி குறித்து மிகுந்த ஆர்வம்  கொண்டுள்ளனர். இது தொடர்பாக, சூரிய சக்தியைப் பயன்படுத்தி சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ள மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மொய்ராங்தெம் சேத் அவர்களைப் பாராட்டினேன்.”

#மன்_கி_பாத்

நமது சுதந்திரப் போராட்டத்திற்குப் பங்களித்தவரும், ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிலும் கவனம் செலுத்தியவருமான பார்பதி கிரிஜியின் நூற்றாண்டு விழாவை அடுத்த மாதம் கொண்டாட உள்ளோம்.  #மன்_கி_பாத் நிகழ்ச்சியின் போது இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினேன்.”

#மன்_கி_பாத்

ரான் உத்சவ் அழைக்கிறது!

கட்ச் பகுதிக்கு வருகைபுரிந்து ரான் உத்சவை அனுபவியுங்கள்.

நாட்டுப்புற மரபுகளின் தாளம், உள்ளூர் மக்களின் சிறந்த கைவினைத்திறன் மற்றும் கட்ச் பகுதியின் காலத்தால் அழியாத அழகைக் காண வாருங்கள்.”

#மன்_கி_பாத்

அழகான கன்னட மொழியை இந்திய வம்சாவளி மக்களிடையே பிரபலமாக்கும் வகையில், துபாயில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பாராட்டத்தக்க முயற்சியை மன்_கி_பாத் நிகழ்ச்சியில் எடுத்துரைத்தேன்.”

#மன்_கி_பாத்

நரசாபுரம் நகரில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, உள்ளூர் மக்களின் சரிகை வேலைப்பாட்டின் கைவினைக் கலையை மீண்டும் உயிர்ப்பித்து, பலருக்கு அதிகாரம் அளித்துள்ளது.”

#மன்_கி_பாத்

இந்தியாவின் வலுவான கலாச்சாரத் தொடர்புகளைக் கொண்டுள்ள  நாடான ஃபிஜியில், தமிழ் மொழி பிரபலமடைந்து வருவதைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.”

#மன்_கி_பாத்

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் போது, காசி மக்களிடையே தமிழ் மொழி பிரபலமடைந்து வருவதைத் தெளிவாகக் காண முடிந்தது. இது  மனதிற்கு இதமளிப்பதாக உள்ளது.”

#மன்_கி_பாத்

மணிப்பூர் மாநிலத்தின் சுராசந்த்பூரைச் சேர்ந்த மார்கரெட் ராம்தார்சீம், அம்மாநிலப்  பாரம்பரிய கைவினைப் பொருட்களைப் பிரபலப்படுத்துவதிலும், மற்றவர்களின் வாழ்க்கைக்கு அதிகாரம் அளிப்பதிலும் ஆற்றிய பணிகளுக்காக பெருமைப்படுகிறேன்.”

#மன்_கி_பாத்

மணிப்பூர் மாநிலத்தின் சேனாதிபதி மாவட்டத்தைச் சேர்ந்த கே. சோகோன் கிரிசேனா, மலர் சாகுபடியில் சிறப்பான பணிகளைச் செய்து, பல்வேறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மாற்றியமைத்துள்ளார்.”

#மன்_கி_பாத்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2209357&reg=3&lang=1

***

TV/SV/KR