Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாட்ரிட்டில் ஸ்பெயின் அதிபர் திரு. மரியானோ ரஜோயுடன் பிரதமர் பேச்சுவார்த்தை; இந்தியா ஸ்பெயின் இடையே ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ஸ்பெயின் அதிபர் திரு. மரியானோ ரஜோயுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இன்றைய பேச்சுவார்த்தை அமையும். இது ஒன்றினைந்த மற்றும் ஒருவரை ஒருவர் சார்ந்த உலகாகும். இருநாடுகளுக்கும் பயனளிப்பதுடன் உலகத்திற்கே பயன்தரும் வகையில் ஸ்பெயினும் இந்தியாவும் இணைந்து செயல்படலாம் என்று பிரதமர் கூறினார். அதிபர் திரு. ரஜோய் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் ஆவார்.

இந்தியா மற்றும் ஸ்பெயின் தீவிரவாதத்தைச் சந்தித்துள்ளது. இரு நாடுகளும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடும் என்று பிரதமர் கூறினார்.

இந்தியாவும் ஸ்பெயினும் தீவிரமான பொருளாதார மாற்றத்திற்கான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. உள்கட்டமைப்பு ரயில்வே மற்றும் அதிநவீன நகரங்கள் திட்டங்களில் ஒத்துழைப்பிற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

“புதிய இந்தியா” என்ற கனவை இந்தியா மற்றும் ஸ்பெயின் இடையேயான உறவு துரிதப்படுத்தும் என்று பிரதமர் கூறினார்.

எரிசக்தி, பாதுகாப்பு, விமானப்போக்குவரத்து ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கிடையே ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இந்த சந்திப்பின் பிறகு, பிரதமர் மோடி ஸ்பெயின் நாட்டின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்தார். இந்தியாவில் ஸ்பெயின் நாட்டின் முதலீட்டுக்கான திறன் மேலும் அதிகரித்துள்ளது என்று பிரதமர் கூறினார். குறிப்பாக உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவுப் பதப்படுத்துதல், வாகனங்கள், ரசாயனம், ஜவுளி ஆகிய துறைகளில் அதிக திறனுள்ளது. அதிநவீன நகரங்கள் முன் முயற்சியில் ஸ்பெயின் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். சரக்கு மற்றும் சேவை வரி (GST) உட்பட இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பொருளாதார மாற்றங்கள் குறித்து பிரதமர் விளக்கினார். இந்தியாவில் உற்பத்தி செய்வோம், டிஜிட்டல் இந்தியா, தொடங்கிடு இந்தியா (Startup India) ஆகிய திட்டங்கள் உலக அளவில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்று பிரதமர் கூறினார்.

ஸ்பெயின் மன்னர் ஆறாம் பிலிப்பையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார்.

***