Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாநிலங்களில் பல்வேறு ரயில் உள்கட்டமைப்புத் திட்டங்களை மேற்கொள்ள ஆதாரங்களைத் திரட்டுவதற்கென மாநில அரசுகளுடன் கூட்டு நிறுவனங்களை உருவாக்க ஒப்புதல்


மாநிலங்களில் பல்வேறு ரயில் உள்கட்டமைப்புத் திட்டங்களை மேற்கொள்ள ஆதாரங்களைத் திரட்டுவதற்கென மாநில அரசுகளுடன் கூட்டு நிறுவனங்களை உருவாக்க ரயில்வே அமைச்சகத்துக்கு அனுமதி வழங்குவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கூட்டு நிறுவனங்கள் ரயில்வே அமைச்சகம் மற்றும் சம்மந்தப்பட்ட மாநில அரசுகளின் பங்கு முதலீட்டில் அமைக்கப்படும். ஒவ்வொரு கூட்டு நிறுவனமும் தொடங்க செலுத்தப்பட்ட மூலதனமாக ரூ.100 கோடியைப் பெற்றிருக்கும். இந்தத் தொகை மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களைப் பொறுத்து அமையும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ரயில்வே அமைச்சகத்தின் தொடக்க செலுத்தப்பட்ட மூலதன வரம்பு ரூ. 50 கோடியாகும். திட்டங்களுக்கான தேவைப்படும் நிதி, திட்ட அனுமதிக்குப் பிறகு நிதியாகவோ பங்கு மூலதனமாகவோ வழங்கப்படும். உரிய அதிகாரம் பெற்ற அமைப்பு நிலையில் நிதி வழங்கப்படும்.

இந்தக் கூட்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட திட்டங்கள் அடிப்படையிலான சிறப்பு திட்ட நிதியங்களை வங்கிகள், துறைமுகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், சுரங்க நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்கு மூலதனத்தின் மூலம் உருவாக்கிக் கொள்ளலாம். ரயில்வே திட்ட நடைமுறைகளில் மாநில அரசுகள் அதிக அளவில் பங்கேற்பதை இந்த கூட்டு நிறுவன திட்டம் உறுதி செய்கிறது. இந்தப் பங்கேற்பு நிதி வழங்குவதில் மட்டுமின்றி முடிவுகள் மேற்கொள்ளும் நடைமுறையிலும் இருக்கும். மேலும் நில ஆர்ஜிதம், சட்டப்படியான அனுமதிகள் ஆகியவற்றை விரைந்து மேற்கொள்வதற்கும் வசதி ஏற்படுத்தித் தரும். மக்கள் பயணத்துக்கும் மட்டுமின்றி சிமெண்ட், எஃகு, மின்சார உற்பத்தி ஆலைகள் போன்ற பல்வேறு தொழிற்சாலைகள் தங்களது கச்சாப் பொருட்கள், உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்வதற்குத் தேவையான ரயில் இணைப்பும் இந்தக் கூட்டு நிறுவனங்களால் உருவாக்கப்படுகிறது.

*****