பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தமது சுதந்திர தின உரையில், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை எடுத்துரைத்தார். உற்பத்தித் துறை, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், எரிசக்திப் பாதுகாப்பு, இளைஞர் மேம்பாடு, புத்தாக்கம், சமூகப் பாதுகாப்பு, பிற முக்கியத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதமரின் உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
1. உற்பத்தி: தன்னிறைவு
கடந்த 12 ஆண்டுகளில்:
* பாதுகாப்பு உற்பத்தி கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகரித்துள்ளது.
* காதி, கிராமியத் தொழில்களின் உற்பத்தி கிட்டத்தட்ட 5 மடங்கு அதிகரித்துள்ளது.
* மின்னணு உற்பத்தி கிட்டத்தட்ட 7 மடங்கு அதிகரித்துள்ளது.
* நவீன ரயில் பெட்டிகளின் உற்பத்தி 21 மடங்கு அதிகரித்துள்ளது.
* கைபேசி உற்பத்தி 35 மடங்கு அதிகரித்துள்ளது.
2. டிஜிட்டல் இந்தியா, புத்தாக்கம்
இந்தியாவின் டிஜிட்டல், புத்தாக்கச் சூழலமைப்பின் விரைவான விரிவாக்கத்தை பிரதமர் எடுத்துரைத்தார்:
* இணையப் பயனர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகரித்துள்ளது.
* காப்புரிமை வழங்கல்கள் 4 மடங்கு அதிகரித்துள்ளன.
* டிஜிட்டல் பரிவர்த்தனைகள் சுமார் 100 மடங்கு அதிகரித்துள்ளன.
* இந்தியா கணிசமான அளவு பெரிய டிஜிட்டல், புத்தாக்கச் சூழலமைப்பை உருவாக்கியுள்ளது.
3. அடிப்படை வசதிகளை விரைவாக வழங்குதல்
அடிப்படை வசதிகள் சாதாரண மக்களை எவ்வளவு விரைவாகச் சென்றடைகின்றன என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
* குழாய் மூலம் குடி நீர் இணைப்புகள், சராசரியாக ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 15 மடங்கு வேகத்தில் வழங்கப்பட்டுள்ளன.
* எல்பிஜி இணைப்புகள் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 6 மடங்கு வேகத்தில் வழங்கப்பட்டுள்ளன.
* ஏழைகளுக்கான கழிப்பறைகள் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 4 மடங்கு வேகத்தில் கட்டப்பட்டுள்ளன.
* ஏழைகளுக்கான உறுதியான வீடுகள் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 3 மடங்கு வேகத்தில் வழங்கப்பட்டுள்ளன.
* நூற்றுக்கணக்கான காலாவதியான சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
* மெட்ரோ ரயில் அமைப்புகள் உள்ளிட்ட நவீன பொதுப் போக்குவரத்து, மேலும் பல நகரங்களைச் சென்றடைந்துள்ளது.
4. குறைக்கடத்தி சூழலமைப்பை உருவாக்குதல்
உள்நாட்டு குறைக்கடத்தித் திறன்களைக் கட்டமைப்பதில் இந்தியாவின் முன்னேற்றத்தை பிரதமர் எடுத்துரைத்தார்:
* முன்பு இந்தியாவில் பெரிய குறைக்கடத்தி உற்பத்தி ஆலை எதுவும் இருக்கவில்லை.
* இந்தியாவில் தற்போது முழுமையான குறைக்கடத்தி சூழலமைப்பு கட்டமைக்கப்பட்டு வருகிறது.
* மூன்று குறைக்கடத்தி ஆலைகள் தொடங்கப்பட்டுள்ளன.
*இந்தியா சிப்களையும் ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது.
5. முக்கிய கனிமங்களைப் பாதுகாத்தல்
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு அத்தியாவசிய கனிமங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், இத்துறையில் இந்தியாவின் திறன்களை வலுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளைக் குறிப்பிட்டார்:
* தேசிய முக்கிய கனிமங்கள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
* பட்ஜெட்டில் முக்கிய கனிம வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
* அத்தியாவசிய கனிம விநியோகத்திற்காக பல நாடுகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
6. எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துதல்
வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதற்கு எரிசக்திப் பாதுகாப்பு இன்றியமையாதது என்றும், குறிப்பாக சிப்கள், செயற்கை நுண்ணறிவு, தரவு மையங்கள் போன்ற தொழில்நுட்பங்களுக்கு அதிக அளவிலான மின்சாரம் தேவைப்படுவதே இதற்குக் காரணம் என்றும் பிரதமர் கூறினார்.
அணுசக்தியின் பங்கை வலியுறுத்திக் கூறிய பிரதமர், பின்வருவனவற்றை எடுத்துரைத்தார்:
* சாந்தி சட்டம் அணுசக்தித் துறையில் ஒரு பெரும் சீர்திருத்தமாகும்.
* அதிவேக ஈனுலை தொழில்நுட்பத்தில் இந்தியா ஒரு முக்கிய மைல்கல்லைக் கடந்துள்ளது.
* அணு எரிபொருளில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்வதில் இந்தத் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கும்.
7. எண்ணெய், எரிவாயு ஆய்வுப் பணிகளை விரிவுபடுத்துதல்
கடல்சார் ஆய்வுப் பணிகள் குறித்த இந்தியாவின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார்:
* முன்னர், இந்தியாவின் கடற்பரப்பில் கிட்டத்தட்ட 99 சதவீதம் செல்லக்கூடாத பகுதியாக வகைப்படுத்தப்பட்டிருந்தது.
* தற்போது அணுகுமுறை ‘செல்லக்கூடாத பகுதி’ என்பதிலிருந்து ‘செல்ல அனுமதிக்கப்பட்ட பகுதி’ என மாற்றப்பட்டுள்ளது.
* முன்னர் தடைசெய்யப்பட்டிருந்த பகுதிகள் ஆய்வுக்காகத் திறக்கப்பட்டுள்ளன.
* இது புதிய எண்ணெய், எரிவாயு இருப்புகளைக் கண்டறிவதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்கியுள்ளது.
8. ஆற்றல் பல்வகைப்படுத்தல்
பல்வேறு எரிசக்தி ஆதாரங்களின் விரைவான விரிவாக்கத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
நகர எரிவாயு விநியோகம்
2014: 70-க்கும் குறைவான நகரங்களில் கிடைத்தது.
இப்போது: சுமார் 700 நகரங்களில் கிடைக்கிறது.
குழாய்வழி சமையல் எரிவாயு
2014: சுமார் 20–22 லட்சம் குடும்பங்கள்.
இப்போது: சுமார் 1.75 கோடி குடும்பங்கள்.
சூரிய மின்சக்தி
2014: சுமார் 2 ஜிகாவாட்.
இப்போது: சுமார் 160 ஜிகாவாட்.
பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம்
* இத்திட்டம் 50 லட்சம் குடும்பங்களைத் சென்றடைந்துள்ளது.
* லட்சக்கணக்கான குடும்பங்கள் குறைந்த அல்லது பூஜ்ஜிய மின் கட்டணங்கள் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
9. ரயில்வே:
இந்திய ரயில்வேயின் மாற்றத்தை பிரதமர் எடுத்துரைத்தார்:
* மின்மயமாக்கல் தொடங்கப்பட்டு 90 ஆண்டுகளுக்குப் பிறகு 2014-ம் ஆண்டில், கிட்டத்தட்ட ரயில்வே கட்டமைப்பில் சுமார் 30% மட்டுமே மின்மயமாக்கப்பட்டிருந்தது.
* இப்போது, இந்திய ரயில்வே ஏறக்குறைய முழுமையான மின்மயமாக்கலை நோக்கி நகர்ந்துள்ளது.
* இந்தியா தனது முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.
10. உலகளாவிய நெருக்கடிகளின் போது இந்தியாவின் மீள்திறன்
11. விவசாயிகளுக்கான மலிவு விலை உரம்
12. வர்த்தக, ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிப்பு
13. வளர்ச்சியடைந்த இந்தியாவில் இளைஞர்களின் பங்கு
14. கல்வி, புத்தாக்கம்
15. புத்தொழில்கள், விண்வெளி, செயற்கை நுண்ணறிவு
16. புதிய துறைகள், புதிய வாய்ப்புகள்
17. ஸ்வாமித்வா திட்டம் மூலம் கிராமப்புற அதிகாரமளித்தல்
18. பாதுகாப்பு ஏற்றுமதி வளர்ச்சி
19. பெண்கள் தலைமையிலான வளர்ச்சி
20. சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துதல்
21. ஆயுஷ்மான் பாரத்
போன்றவை குறித்துப் பிரதமர் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299805®=3&lang=1
***
(Release ID: 2299805)
SS/PLM/RJ