பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், மாஸ்கோவில் உள்ள ரஷ்ய தேசிய நெருக்கடி நிலை மேலாண்மை மையத்தை நாளை, 24, டிசம்பர் 2015 அன்று பார்வையிடுகிறார்.
ரஷ்யாவின் தேசிய நெருக்கடி நிலை மேலாண்மை மையம் என்பது, நெருக்கடி நிலை காலங்களில் அனைத்து துறைகளோடும் தொடர்பு ஏற்படுத்தி மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுப்பதற்காக உருவாக்கப்பட்ட மையமாகும். நேரடி கண்காணிப்பு, விவரங்கள் சேகரிப்பு, விவரங்கள் ஆய்வு, மாதிரிகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு திறன்களை படைத்தது. இந்த தேசிய நெருக்கடி நிலை மேலாண்மை மையம். ரிமோட் சென்ஸிங் தொழில்நுட்பம் மூலமாக செயற்கை கோள் வழிகாட்டும் கருவி மற்றும் உலகளாவிய கண்காணிப்பு தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்தி இந்த தேசிய நெருக்கடி நிலை மேலாண்மை மையம் செயல்படுகிறது. மாஸ்கோவிலிருந்து செயல்படும் இந்த மையம், ரஷ்யா முழுவதிலும் இருந்து வரும் தகவல்களை பரிசீலித்தும், தொழிற்சாலைகள், கூட்டம் அதிகமாக உள்ள இடங்கள், சுனாமி ஆபத்துகள், மற்றும் இயற்கை பேரிடர்கள் ஆகியவற்றை கண்காணித்து தகவல்களை ஆய்வு செய்கிறது.
On his Russia visit, PM Modi will visit National Crisis Management Center and get an overview of its functioning. https://t.co/I8TdMQvAIA
— PMO India (@PMOIndia) December 23, 2015
The NCMC carries out continuous monitoring & data collection, forecasting possible emergencies & informing people in case of an emergency
— PMO India (@PMOIndia) December 23, 2015