பி.எம்.இந்தியா
மாஸ்கோவில் உள்ள EMERCOM – ரஷ்ய தேசிய நெருக்கடி நிலை மேலாண்மை மையத்தை (NCMC) பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார்.
இந்த மையம் செயல்படும் விதம் மற்றும் நிகழ்கால கண்காணிப்பு குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது. பல்வேறு பேரிடர் – நிவாரண முகமைகளுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பு குறித்தும் பிரதமரிடம் விரிவாக விளக்கப்பட்டது. விண்வெளி கண்காணிப்பு மற்றும் முப்பரிமாண மாதிரிகள் வடிவமைப்பு திறன் குறித்தும் விளக்கப்பட்டது. இம்மையத்தில், ரஷ்ய எல்லை மற்றும் அதனை தாண்டியும் உள்ள இடங்களில் மனித உயிருக்கும் பொருட்களுக்கும் சேதம் ஏற்படுத்தும் நிகழ்வு, இயற்கை பேரிடர் ஆகியவற்றை கண்காணிக்கும் திறன், அதன் சர்வதேச ஒத்துழைப்பு போன்ற அம்சங்களும் விவரிக்கபட்டது.
இந்த மையத்தின் பேரிடர் தவிர்ப்பு மற்றும் பேரிடர் சமயத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை, உலக அளவில் பரந்து விரிந்துள்ள நிலை ஆகியவற்றை அறிந்து கொள்வதில் பிரதமர் ஆர்வம் காட்டினார். இம்மையம் மேற்கொண்டுவரும் செயல்கள் ” மனிதநேயத்திற்கு ஆற்றும் சிறந்த சேவை” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த விஜயத்தில் தேசிய பாதுகாப்பு செயலர் திரு அஜீத் தோவால், வெளியுறவுத் துறை செயலர் திரு எஸ். ஜெய்சங்கர், பாதுகாப்பு துறை செயலர் திரு ஜி. மோகன் குமார் மற்றும் பிரதமருடன் சென்ற பிரமுகர்கள் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.
பன்முக அளவில் ஒத்துழைப்பை கொண்ட ரஷ்ய தேசிய நெருக்கடி நிலை மேலாண்மை மையம், அவசர நிலை குறித்து மக்களுக்கு தகவல் தெரிவிக்கவும் மற்ற முகமைகளுடன் ஒத்துழைக்கும் நோக்கத்திலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. நிகழ்கால கண்காணிப்பு, தரவு சேகரித்தல், ஆய்வு, மாதிரி வடிவமைப்பு ஆகிவை இம்மையத்தின் திறனாகும். உலகளாவிய திசை அறிதல் செயற்கைக்கோள் முறையையும் உலகளாவிய கண்காணிப்பு தொழில்நுட்பதையும் இந்த மையம் பயன்படுத்துகிறது.
PM @narendramodi at EMERCOM, the Russian National Crisis Management Centre. pic.twitter.com/AoCiLg2eU5
— PMO India (@PMOIndia) December 24, 2015
Visit to EMERCOM was a great learning experience. Was shown aspects relating to disaster management & how technology is used in this field.
— Narendra Modi (@narendramodi) December 24, 2015
The NCMC is doing a big service to humanity. Their disaster prevention & response activities are laudatory. https://t.co/cqHoklY9iv
— Narendra Modi (@narendramodi) December 24, 2015