Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளுடன் கூடிய மின் விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்தும் 3-ம் கட்ட பசுமை மின் விநியோக வழித்தடத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு பசுமை மின் விநியோக வழித்தடம் அமைப்பதற்கான 3-வது கட்ட திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இடையே 135 ஜிகாவாட் வரையிலான புதுப்பிக்கத்தக்க மின் விநியோக கட்டமைப்புகளை வலுப்படுத்த உதவிடும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளர்கள் அல்லது மின் கட்டமைப்பு நெகிழ்வுத் தன்மைக்கு ஏற்ப முக்கியத்துவம் வாய்ந்த பிற இடங்களில் 1 மணி நேரத்திற்கு 50 ஜிகாவாட் திறன் கொண்ட மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை நிறுவுவதற்கும் இந்தத் திட்டம் வகை செய்கிறது.

இது மின்சார உற்பத்தியில் ஏற்படும் இடையூறுகள், உச்ச நேரங்களில் மின் விநியோகத்தில் ஏற்படும் குறைபாடுகள், சூரியசக்தி உற்பத்தியில்லாத நேரங்களில் மின்சாரத் தேவையை சமாளிக்க  உதவிடும். இத்திட்டம் இந்தியாவில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மின் கட்டமைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் மின்சார விநியோகத்தை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2032-33-ம் நிதியாண்டிற்குள் இத்திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 1,86,405 கோடியாகும். இதில் மாநிலங்களுக்கு இடையேயான மின் விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ரூ. 1,36,378 கோடியும், 50 கிகாவாட் திறன் கொண்ட மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை நிறுவ ரூ.50,000 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.54,082 கோடியை மத்திய அரசு வழங்குகிறது.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2316948&reg=3&lang=1

***

SS/SV/RJ/SH