Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மியான்மரில் யாமெதின் -இல் உள்ள பெண் காவலர் பயிற்சி மையத்தை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை மியான்மரில் யாமெதின் – இல் உள்ள பெண் காவலர் பயிற்சி மையத்தை மேம்படுத்துவதற்கான இந்தியா- மியான்மருக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நடைமுறை குறித்த தனது பிந்தைய ஒப்புதலை வழங்கியது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செப்டெம்பர் 6, 2017 அன்று கையெழுத்தானது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய அரசிடமிருந்து தொழில்நுட்ப, நிதியுதவியைப் பெற்று மியான்மர் அரசு தனது காவல் படையின் திறனை வளர்த்தெடுப்பதற்காக யாமெதின் பெண் காவலர் பயிற்சி மையத்தினை மேம்படுத்துவதற்கானதாகும்.

******