Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மியான்மருடன் பாரம்பரிய மருத்துவ முறைகள் துறையில் கூட்டுறவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் மியான்மர் இடையே பாரம்பரிய மருத்துவ முறைகள் துறையில் கூட்டுறவுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான தனது ஒப்புதலை வழங்கியது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மியான்மரில் ஆயுஷ்/பராம்பரிய மருத்துவ முறைகளின் வளர்ச்சிக்கு இருநாடுகளுக்கு இடையேயான கூட்டுறவிற்கான நடைமுறைகளை அளிக்கும். இது ஆயுஷ் மருத்துவ அமைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, பாதுகாப்பு, உற்பத்தி மற்றும் நிலைபெற செய்தலுக்கு ஊக்கமளிக்கும்.