பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், வெள்ளிக்கிழமையன்று, முக்கிய உட்கட்டமைப்புத் துறைகளான எரிசக்தி, நிலக்கரி, வீட்டுவசதி, துறைமுகங்கள், மற்றும் டிஜிட்டல் இந்தியா ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி அளிக்கும் திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறதென்று பிரதமரிடம் அப்போது தெரிவிக்கப்பட்டது. மின்வசதி இல்லாமல் இருந்த 18,500 கிராமங்களில் 6000 கிராமங்களுக்கு ஏற்கனவே மின்வசதி அளிக்கப்பட்டள்ளது. இந்த திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை கண்காணிப்பதற்காக, ஜியோ டேக் என்ற நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு திட்டத்தின் முன்னேற்றம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அருணாச்சலப் பிரதேசம் போன்ற எளிதில் அணுக முடியாத மாநிலங்களில் கிரிட் இணைப்பு இல்லாத சூரிய ஒளி மின்சக்தி பேனல்கள் அமைக்கப்பட்டு மின்சார வசதி அளிக்கப்பட்டு வருகிறது. நாடெங்கும் எல்.ஈ.டி. பல்புகள் வழங்கும் திட்டமும் ஆய்வு செய்யப்பட்டது.
2022ம் ஆண்டுக்குள் 175 கிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்ற திட்டத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது வரை அமைக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையங்களின் திறன் 39.5 கிகா வாட்டை எட்டியுள்ளது.
இந்திய நிலக்கரி நிறுவனத்தின் உற்பத்தி கடந்த 5 ஆண்டுகளின் சராசரியான 3 சதவீத வளர்ச்சியோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 9.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு வழங்கும் முயற்சிகளை துரிதப்படுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தினார். இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் வைஃபை இணைப்பு வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார். இது வரை 12 இடங்களில் வைஃபை வசதி செய்யப்பட்டுள்ளது என்று பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களுக்கு மொபைல் இணைப்பு வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார். 1371 கோபுரங்கள் இந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன என்று பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.
அனைவருக்கும் வீட்டு வசதி என்ற திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். இத்திட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரும், இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் நவீன தொழில்நுட்பம் மற்றும் உள்ளூர் பொருட்களைக் கொண்டு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.
துறைமுகத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த பிரதமர், அனைத்து முக்கிய துறைமுகங்களிலும், கப்பல் போக்குவரத்து சர்வதேசத் தரத்துக்கு நிகராக அதிகரிக்கத் தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். உள்நாட்டு கப்பல் போக்குவரத்தை மேம்படுத்தவும், கப்பல் பயண நேரத்தை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.
Reviewed key infra projects including in power, coal, housing, ports sectors & Digital India at a meeting yesterday. https://t.co/1fOOGmWuY0
— Narendra Modi (@narendramodi) March 5, 2016
Pace of rural electrification is phenomenal. What's even better is how technology has been used in the entire process. Kudos to the Ministry
— Narendra Modi (@narendramodi) March 5, 2016
We discussed ways to hasten the process of providing mobile connectivity in rural areas & reviewed work done in Housing for All scheme.
— Narendra Modi (@narendramodi) March 5, 2016
On the ports sector, we are working towards improving the average vessel turnaround time at major ports, at par with global standards.
— Narendra Modi (@narendramodi) March 5, 2016
Such comprehensive meetings on infrastructure are extremely enriching & provide a wide perspective on where we stand & the roadmap ahead.
— Narendra Modi (@narendramodi) March 5, 2016