Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முதல் அரசியல் சட்டம் தினத்தை முன்னிட்டு பிரதமர் மக்களுக்கு வாழ்த்து,


வரலாறு சிறப்புமிக்க முதல் அரசியல் சட்ட தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை கூறியுள்ளார். இந்திய அரசியல் சட்டத்திற்காக டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கரின் பங்களிப்புக்கு பிரதமர் தலை வணங்கினர்.

வரலாறு சிறப்புமிக்க முதல் அரசியல் சட்ட தினத்தை முன்னிட்டு இந்திய மக்களுக்கு எனது வாழ்த்துகள். நமது அரசியல் சட்ட கட்டமைப்பு குறித்து நீங்கள் மேலும் அறிந்துக்கொள்ள இந்நாள் உங்களை ஊக்குவிக்கட்டும்.

நாம் பெருமிதம் கொள்ளும் இந்திய நமது அரசியல் சட்ட கட்டமைப்புக்காக அயராமல் உழைத்த அனைத்து சிறந்த பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்நாள் சமர்ப்பணம்.

டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கரின் முக்கிய பங்களிப்பை குறிப்பிடாமல் நமது அரசியல் சட்ட கட்டமைப்பு முழுமை அடையாது.

நமது அரசியல் சட்ட கட்டமைப்பின் சிறந்த கொள்கைகளை பின்பற்றி, இந்தியாவை தோற்றுவித்த நிறுவன தந்தையர் பெருமைகொள்ளும் வகையில் இந்தியாவை உருவாக்குவோம் என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

***