Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாள் – பிரதமர் மரியாதை

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாள் – பிரதமர் மரியாதை


முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மலர் அஞ்சலி தூவி மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் பெருமைக்குரிய மகனான திரு. லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.

எளிமை மற்றும் நம்பகத்தன்மைக்காக திரு. சாஸ்திரி அவர்களை நாம் எப்போதும் நினைவு கூறுவோம். கடினமான நேரத்தில் அவருடைய திடமான தலைமை நாட்டின் முக்கிய சொத்தாக அமைந்தது.

சாஸ்திரி அவர்களின் “ஜெய் ஜவான் (வீரர்களுக்கு வெற்றி), ஜெய் கிசான் (விவசாயிகளுக்கு வெற்றி) என்ற சொற்கள் நமக்கு என்றும் உத்வேகமூட்டுகின்றன. நாம் விவசாயிகள் மற்றும் வீரர்களின் நலனுக்காக உறுதியாக செயல்பட்டு வருகிறோம்.

நரேந்திர மோடி.

***