பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் மும்பை கப்பற்படை துறையில் பிரிஹன் மும்பை மின்சார சப்ளை மற்றும் போக்குவரத்து நிறுவனம் (பெஸ்ட்) – க்கு 73 சதுரமீட்டர் நிலத்தைக் குத்தகைக்கு, ஆண்டுக்கு ரூ. ஒன்று என்ற பெயரளவிலான தொகைக்கு, விடுவது குறித்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தக் குத்தகை தொடக்கமாக 30 ஆண்டு காலத்திற்கும் அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு 30 ஆண்டு காலங்களுக்கு புதுப்பிக்கக் கூடியதாகவும் இருக்கும். இதனால் மும்பை கப்பற்படைத் துறையில் நான்காவது மின்மாற்றியை நிறுவவும் நிலத்தடி நீர் சேமிப்பு வசதியை அமைக்கவும் வழி வகை ஏற்படுகிறது. இதனால் தற்போது அமைக்கப்பட்டு வரும் புதிய உலர் துறை வசதிக்கு மின்சார வசதி கிடைக்கும்.
மின்மாற்றியை நிறுவும் பணியை பெஸ்ட் நிறுவனம் தனது சொந்தச் செலவில் மேற்கொள்ளும். இதனால் இந்தியக் கப்பற்படைக்கு எவ்வித நிதிப் பொறுப்பும் இல்லை.
பின்னணி:
தற்போது உள்ள மின்சார சப்ளை புதிய உலர்துறை கட்டுமானத்துக்கு போதமானது அல்ல எனவே கூடுதல் மின்மாற்றி நிறுவுவதும் நிலத்தடியில் பம்ப் செய்யும் வசதியுடனான நீர் சேமிப்பு தொட்டிகள் அமைப்பதும் அவசியமாகிறது. இத் தொட்டிகள் உலர் துறையின் வளாகத்தில் தீ விபத்துப் பாதுகாப்புக்கென தேவைப்படுகின்றன. பெஸ்ட் நிறுவனத்துக்கு 73 சதுரமீட்டர் நிலத்தை குத்தகைக்கு விடுவதால் இந்த நிறுவனம் புதிய மின்மாற்றியை அமைக்கவும் நிலத்தடியில் பம்ப் செய்யும் வசதியுடன் நீர் சேமிக்கும் தொட்டிகள் அமைக்கவும் உரிமை பெறுகின்றது. அதே சமயம் இந்த நிலத்தின் சொத்து உரிமை கடற்படையின் வசமே தொடர்ந்து இருக்கும்.
மும்பை கடற்படைக்கு பெஸ்ட் நிறுவனம் மின்சாரத்தை வழங்குகிறது. தற்போது மும்பை கடற்படைத்துறையில் முக்கிய துணை மின்நிலையத்தில் மூன்று மின்மாற்றிகள் உள்ளன. இவற்றை பெஸ்ட் நிறுவனம் பராமரித்து வருகிறது. இதில் கிடைக்கும் மின்சாரம் கடற்படையின் தற்போதுள்ள வசதிகளுக்கு மட்டுமே போதுமானதாகும்.