Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மூத்த நடிகர் சலீம் குமார் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


மூத்த நடிகர் சலீம் குமார் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். சிறப்பான திரைப்பயணத்தில், பலதரப்பட்ட கதாபாத்திரங்களில், பன்முகத்தன்மையாலும் மறக்கமுடியாத நடிப்பாலும் முத்திரை பதித்தவர் அவர் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் துயரமான நேரத்தில், அந்த மூத்த நடிகரின் குடும்பத்தினருடனும் எண்ணற்ற ரசிகர்களுடனும் தமது எண்ணங்கள் இருப்பதாக திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

மூத்த நடிகர் சலீம் குமாரின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. புகழ்பெற்ற திரைப்பயணத்தில், பலதரப்பட்ட கதாபாத்திரங்களில், பன்முகத்தன்மையாலும் மறக்கமுடியாத நடிப்பாலும் அவர் முத்திரை பதித்தார். இந்தத் துயரமான நேரத்தில் என் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் எண்ணற்ற ரசிகர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி.”

***

(Release ID: 2269985)

TV/PLM/RJ