பி.எம்.இந்தியா
மதிப்பிற்குரிய அதிபர் திரு என்ரிக் பேனா நியேட்டோ
அருமை சகோதரர்களே,
இந்த அருமையான வரவேற்புக்கு அதிபருக்கு எனது நன்றிகள்.
உங்களின் விருந்தோம்பல் என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. பிரதமரான பின் உங்களின் நாட்டுக்கு இதுவே எனது முதல் பயணமாகும். சாதாரண இந்திய குடிமகனாக 90களில் உங்களின் நாட்டுக்கு நான் பயணம் மேற்கொண்ட போது உங்கள் கலாச்சாரத்தின் வளத்தை நான் உணர்ந்தேன். கடந்த இரு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக நான் உங்களை சந்திக்கிறேன். உங்களுடன் நான் கொண்ட கலந்துரையாடல்கள் எனக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. உங்களுடனான எனது நட்பை நான் மிகவும் முக்கியமாகக் கருதுகிறேன்.
நண்பர்களே, லத்தீன் அமெரிக்க நாடுகளில் மெக்சிகோதான் இந்தியாவை முதலில் அங்கீகரித்தது. அதன்பின்பு நமது அனைத்து இருநாட்டு உறவுகளும் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2007ம் ஆண்டு மிக முக்கிய பங்குதாரர்களில் ஒருவராக நாம் அங்கீகரிக்கப்பட்டோம். இன்று அதிபருடன் நான் கொண்ட கலந்துரையாடல் நமது இருநாட்டு உறவு சார்ந்த அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் மற்றும் சர்வதேச விஷயங்களில் தீர்வு காணும் வகையில் அமைந்தது. நமது உறவை மேலும் மேம்படுத்தும் வகையில் உறுதியான திட்டங்களை வகுத்து அதற்காக உழைக்கவும் ஒப்புக் கொண்டுள்ளோம்.
நண்பர்களே,
நமது உறவில் தொழில் மற்றும் முதலீடு மிகவும் முக்கியமானது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் மெக்சிகோ முக்கிய பங்குதாரராக விளங்குகிறது. வாங்குவோர் விற்போர் உறவைத் தாண்டி, நீண்டகால உறவை ஏற்படுத்துவோம் என்று நம்புகிறோம். வர்த்தக உறவை பொறுத்தவரையில் தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, மருந்து பொருட்கள் தயாரிப்பு, வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் ஆகியவை வளர்ச்சிக்கான முக்கிய துறைகளாக உள்ளது. ஆனால், வர்த்தகம் மற்றும் முதலீடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய புதிய துறைகளில் நமது உறவை மேம்படுத்துவதற்கான திறனும் உள்ளது. இதுதொடர்பாக, அதிபரும், நானும் விண்வெளி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நமது உறவை வலுப்படுத்த புதிய வழிகளைக் கண்டறிய ஒப்புக் கொண்டுள்ளோம். வேளாண் ஆராய்ச்சி, உயிரி தொழில்நுட்பம், கழிவு மேலாண்மை, பேரிடர் எச்சரிக்கை மற்றும் மேலாண்மை, சூரிய எரிசக்தி ஆகியவற்றிலும் உறுதியான திட்டங்களைக் கொண்டு வருவதில் அதிக கவனம் செலுத்த உள்ளோம். சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டணிக்கு ஆதரவளித்ததற்காக அதிபர் திரு பேனா நியேட்டோவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது, உலகளவில் சூரிய எரிசக்தி தொழில்நுட்பத்தில் மாற்றத்தை உருவாக்கி, வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் தீவு நாடுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
நண்பர்களே,
இந்த நூற்றாண்டின் வாய்ப்புகளையும் சவால்களையும் நானும் அதிபரும் அறிவோம். வளர்ந்து வரும் சர்வதேச பிரச்சினைகளில் நமது ஒரே நிலைப்பாடு நமது திறன்களை வலுப்படுத்த உதவுகிறது. தேசிய பாதுகாப்புப் படையில் இந்தியாவை உறுப்பினராக இணைக்க மெக்சிகோவின் ஆதரவுக்காக அதிபர் திரு பேனா நியேட்டோவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மதிப்பிற்குரிய,
இந்த நாட்டின் எதிர்காலத்தை மாற்ற முடியும் என்ற நம்பிக்கைக் கொண்ட சீர்திருத்தவாதியை நான் உங்களில் காண்கிறேன். இந்தியாவின் பொருளாதார மற்றும் அரசாட்சி முறைகளில் மாற்றம் கொண்டு வருவதில் நான் அதிக கவனம் கொண்டுள்ளேன். இத்துறையில் நாம் நமது சிறந்த வழிமுறைகளை பகிர்ந்து கொள்வதின் மூலம் இரு சமூகமும் பலனடையும். சகோதரர்களே, சிறந்த எழுத்தாளரான ஆக்டேவியோ பாஸ் தனது புத்தகமான “இன் லைட் ஆஃப் இந்தியா “வில் இந்தியராக இருப்பது என்பது என்னவென்று நான் புரிந்து கொள்கிறேன். ஏனெனில், ஆனால், நான் மெக்சிகன் நாட்டை சேர்ந்தவன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூற்றை அப்படியே மாற்றியும் சொல்லலாம். இருநாடுகளுக்கு இடையேயான புரிதலை மேம்படுத்துவதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம் என்று நான் நம்புகிறேன். இந்தப் பயணம் மிகவும் அருமையாக அமைந்தது. மரியாதைக்குரிய அதிபரே, உங்களின் வரவேற்புக்காகவும், நட்புக்காகவும், இந்தியா மெக்சிகோ இடையேயான நட்புறவில் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை ஆகியவற்றுக்காக நான் மீண்டும் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் விரைவில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு அமைய வேண்டும். அப்போது நான் உங்களை வரவேற்க ஆவலுடன் உள்ளேன்.
நன்றி, மிக்க நன்றி.
My remarks at the Joint Press Meet with President @EPN. https://t.co/H5t357hzZr pic.twitter.com/GRBbQX117l
— Narendra Modi (@narendramodi) 9 June 2016