Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

யாழ்ப்பாணத்தில் புதுப்பிக்கப்பட்ட துரையப்பா அரங்கை காணொளிக் காட்சி மூலம் துவக்கி வைத்து பிரதமர் உரை

யாழ்ப்பாணத்தில் புதுப்பிக்கப்பட்ட துரையப்பா அரங்கை காணொளிக் காட்சி மூலம் துவக்கி வைத்து பிரதமர்  உரை

யாழ்ப்பாணத்தில் புதுப்பிக்கப்பட்ட துரையப்பா அரங்கை காணொளிக் காட்சி மூலம் துவக்கி வைத்து பிரதமர்  உரை


இலங்கை அதிபர் மாண்புமிகு மைத்ரிபாலா சிரிசேனா அவர்களே, இலங்கை அரசின் மாண்புமிகு அமைச்சர்களே, இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினால்ட் குர்ரே அவர்களே, வடகிழக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களே, மரியாதைக்குரிய அழைப்பாளர்களே யாழ்ப்பாண குடிமக்களே வணக்கம். சென்ற ஆண்டு மார்ச் மாதம் நான் யாழ்ப்பாணத்தில் பயணம் மேற்கொண்டிருந்தேன். அப்போது யாழ்ப்பாண மக்கள் எனக்களித்த அன்பான வரவேற்பு இன்னும் என் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. அது வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். ஏனெனில் அந்த நாளில்தான் இந்தியப் பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணம் வருவது முதல் முறையாக நிகழ்ந்தது.

இன்றைய தினம் மற்றொரு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். இன்று நம்மிரு நாடுகளுக்குமிடையே உள்ள பங்கேற்பு பண்பை இலங்கை மக்கள் யாழ்ப்பாண மக்கள் ஆகியோருடன் மீண்டும் கொண்டாடுகிறோம். இன்று அதிபர் சிரிசேனாவும் நானும் இணைந்து துரையப்பா விளையாட்டு அரங்கை இலங்கை மக்களுக்கு அர்ப்பணித்து வைத்துள்ளோம். இதில் நாங்கள் தனியாக இல்லை. இன்றைய அதிநவீன தொலைத் தொடர்பு கருவிகள் இந்தியாவின் 125 கோடி மக்களை இலங்கையின் நட்புள்ளம் கொண்ட மக்களுடன் இணைத்து இந்தக் கொண்டாட்டங்களின் பங்கேற்கச் செய்துள்ளன.

நண்பர்களே, 20 ஆண்டுகள் காத்திருந்த பிறகு உங்களது கைதட்டுதல்களும் மகிழ்ச்சிக் கோஷமும் மீண்டும் துரையப்பா அரங்கின் உணர்வைப் பிரதிபலிக்கின்றன. ஆயிரக் கணக்கான கிலோ மீட்டர் தூரத்திற்கப்பால் தில்லியில் அமர்ந்துள்ள நாங்கள், உங்கள் மனத்துடிப்புகளையும் யாழ்ப்பாணத்தின் மாற்றுச் சூழலையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. துரையப்பா விளையாட்டரங்கம் வெறும் செங்கல்லாலும் சுண்ணாம்பாலும் உருவாக்கப்பட்டதல்ல. அது நம்பிக்கை மற்றும் பொருளாதார வளர்ச்சியின் சின்னம். யாழ்ப்பாண இளைஞர்களின் எதிர்கால வளத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் உகந்த ஒரு களம். நீங்கள் வன்முறையைக் கைவிட்டு பொருளாதார வளர்ச்சிப் பாதையில் தொடர கொண்டுள்ள மன உறுதியை அது வெளிப்படுத்துகிறது. அதன் அடித்தளங்கள் உங்களது வீரம் மற்றும் தியாகத்தால் தாங்கப்பட்டுள்ளது. அரங்கம் வெற்றிகரமாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது, நீங்கள் கடந்த காலத்தை பின்னுக்குத் தள்ளி வளமான எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குவதைக் காட்டுகிறது.

மாண்புமிகு சிரிசேனா அவர்களே,

உங்களது முன்னோக்கு இலட்சிய தலைமைப் பண்புக்கு தலை வணங்குகிறேன். பிரதமர் திரு விக்கிரம சிங்க, வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் இந்தத் திட்டம் வெற்றி பெறுவதை உறுதி செய்ய எடுத்த முயற்சிகளுக்காக அவர்களுக்கும் தலை வணங்குகிறேன்.

நண்பர்களே,

நம்மிடையே உள்ள உறவுகள் இரண்டு அரசுகளுக்கு இடையிலானது மட்டுமல்ல. நமது வரலாறு, பண்பாடு, மொழி, கலை மற்றும் புவியியல் சார்ந்த வளமான தொடர்புகளில் அது வாழ்கிறது. தனது பொருளாதார வளர்ச்சி அண்டை நாடுகளுக்கு வேகமளித்து நன்மைகளைக் கொண்டு வரவேண்டுமென இந்தியா உறுதியாக நம்புகிறது. துரையப்பா விளையாட்டு அரங்கு நமது கூட்டுறவின் உணர்வை உள்ளடக்கியது. இலங்கை மேம்பாட்டுக்கு இந்தியா அளிக்கும் ஆதரவு நமது நட்புறவுக்கான உறுதி மொழியாகும். இந்த உறுதி உங்களது முன்னுரிமைகள் மற்றும் உங்களது தேவைகள் அடிப்படையில் அமைந்திருக்கும் என்ற இந்த வார்த்தையை நீங்கள் நம்பிச் செயல்படலாம். இதுதான் நமது தொடர்ந்த உறவுகளை தற்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் உகந்ததாகச் செய்கிறது.

நண்பர்களே,

பொருளாதார ரீதியில் வளமான இலங்கையைக் காண வேண்டும் என்பதுவே இந்தியாவின் அவா. அதுவும் ஒற்றுமை ஒருமைப்பாடு- அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பு – சமவாய்ப்பு மற்றும் கண்ணியம் ஆகியவை நாடு முழுவதும் அதன் மக்களிடையே துலங்கி நிற்கும் இலங்கையை காணவேண்டும் என்பதே அந்த அவா.

மாண்புமிகு சிரிசேனா அவர்களே மற்றும் நண்பர்களே,

இன்னும் 72 மணிநேரத்திற்குப் பிறகு இம்மாதம் 21 – ந் தேதி உலகம் இரண்டாவது சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட உள்ளது. இந்த பொருள் தொடர்பாக 2014 – ல் வந்த ஐ.நா. தீர்மானத்தை முதலாவதாக ஆதரித்த நாடுகளில் இலங்கையும் ஒன்று. இன்று சர்வதேச யோகா தினத்தின் தொடக்கத்தை முன்னோடி நிகழ்ச்சியாக யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டரங்கில் தொடங்குகிறோம். சற்று நேரத்திற்கு முன்னதாக நிகழ்த்திக் காட்டப்பட்ட சூரிய நமஸ்காரம் முழு அளவு ஆரோக்கியம், இணக்கமான நிலைத்த இயற்கையுடன் இயைந்த வாழ்வுக்கான செய்தியை, வெளியிட்டுள்ளது. சர்வதேச யோகா தினத்துக்கு இதைவிட சிறந்த தொடக்கமும் புகழாரமும் வேறு ஏதும் இருக்க முடியாது.

மாண்புமிகு அதிபர் சிரிசேனா அவர்களே,

உங்களுக்கு மீண்டும் நன்றி. உங்கள் அருகிலுள்ள தலைவர்கள் அனைவருக்கும், அன்பான யாழ்ப்பாண மக்களுக்கும் இந்த வாய்ப்புக்காக நன்றி தெரிவித்துக் கொண்கிறேன். துரையப்பா விளையாட்டு அரங்கம் நிலைத்திருக்கும் நமது நட்புறவின் மற்றொரு சின்னமாக விளங்கும். இலங்கை தனது மக்களின் வளர்ச்சி மற்றும் வளத்துக்காக பாதை வகுத்து நடைபோடும் போது இந்தியாவும் உடன் வந்து உதவும். இலங்கை மக்களுக்கு 125 கோடி இந்திய மக்கள் சார்பாக மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“மிக்க நன்றி” அனைவருக்கும் நன்றி.