பி.எம்.இந்தியா

மேடையில் அமர்ந்திருக்கும் எனது அமைச்சரவை சகா திரு ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் அவர்களே, ஆயுஷ் துறையோடு தொடர்புடைய விருதாளர்களே, யோகா பயிற்சியாளர்களே, அதிகாரிகளே, பெரியோர்களே, தாய்மார்களே!
உடல்தகுதி இந்தியா இயக்கத்தைத் தொடங்கி வைத்த அடுத்த நாளிலேயே ஆயுஷ் மற்றும் யோகா தொடர்பான நிகழ்ச்சிக்கு வருவது மிக நல்ல ஒருங்கிணைவாகும். உடல்தகுதி இயக்கத்தின் மிக முக்கிய அங்கங்களாக இருப்பவை ஆயுஷும், யோகாவும்.
இன்று மூன்று நிகழ்வுகள் உள்ளன. இரண்டு நிகழ்வுகள் நமது பாரம்பரியத்திற்கும், மரபுக்குமான விருதுகளோடு, கவுரவத்தோடு தொடர்புடையது. மூன்றாவது ஆரோக்கியத்திற்கான அடிப்படைக் கட்டமைப்போடு தொடர்புடையவை. ஹரியானாவில் இன்று பத்து ஆயுஷ் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக ஹரியானா மக்களை நான் பாராட்டுகிறேன்.
யோகா பயிற்சியாளர்களுக்கும், யோகாவுக்கு சேவை செய்வோருக்கும், உலக அளவில் யோகாவை மேம்படுத்தும் நண்பர்கள் மற்றும் அமைப்புகளுக்கும் விருதுகள் வழங்கும் வாய்ப்பையும் நான் பெற்றிருக்கிறேன். பல ஆண்டுகளாக யோகாவை மேம்படுத்துவதில் ஈடுபாடு கொண்ட இத்தாலி மற்றும் ஜப்பான் கூட்டாளிகளை நாம் பெற்றிருக்கிறோம்.
சற்றுநேரத்திற்கு முன் ஆயுஷ் மருத்துவமனையை வளப்படுத்திய 12 ஆளுமைகளை கவுரவிக்கும் வகையில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. மக்களுக்கு சிகிச்சை அளிக்க இவர்கள் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்.
இன்று வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகளில் ஒன்று தின்ஷா மேத்தாவை கவுரவிக்கிறது. இவர் காந்தியடிகளுக்கு மருத்துவராக இருந்தவர். இயற்கை மருத்துவத்தின் அர்ப்பணிக்கப்பட்ட ஊழியராவார்.
5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதில் ஆயுஷ் முக்கியப் பங்காற்ற உள்ளது. வரும் ஆண்டுகளில் நோய்த்தடுப்பு சுகாதார சந்தை இந்தியாவில் பெருமளவில் விரிவடையவுள்ளது. இது மிகப்பெரிய வாய்ப்பாகும். நோய்த் தடுப்பு சுகாதார முறையில் ஈர்க்கத்தக்கக் குறியீட்டை ஒட்டு மொத்த உலகத்திற்கும் நாம் உருவாக்க இருக்கிறோம். இதற்காக 17 நாடுகளுடன் நாம் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். எனவே, இதற்கான பணியை விரைவுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
உலகம் முழுவதும் வாழ்க்கையின் ஒரு முக்கியப் பகுதியாக யோகா தற்போது மாறிவருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் உலகில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சர்வதேச யோகா தினம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது யோகா ஆரோக்கியத்திற்கான இணைப்பு ஊடகமாக மட்டுமின்றி இந்தியாவோடு உலகத்தை இணைக்கும் ஊடகமாகவும் விளங்குகிறது.
யோகாவுக்கு அடுத்தபடியாக ஆயுஷ் மேம்பாட்டிற்குத் தீவிரமாகப் பணியாற்றும் தேவை உள்ளது. இந்தியாவில் மருத்துவ சுற்றுலா தொடர்ச்சியாக வளர்ந்து வருகிறது. இது மேலும் வளர வாய்ப்பு இருக்கிறது. மருத்துவம் மற்றும் மருத்துவ யோகாவிற்கான அடிப்படைக் கட்டமைப்பை மாநில அரசுகளின் உதவியுடன் மேம்படுத்துவது அவசியமாகும். இதுதொடர்பாக பல்வேறு துறைகளோடும் அமைச்சகங்களோடும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆயுஷ் அமைச்சகத்திற்கு நான் சிறப்பு வேண்டுகோள் விடுக்கிறேன். நாட்டின் அனைத்துப் பகுதிக்கும் குறிப்பாக வடகிழக்குப் பகுதிக்கு மருத்துவ சுற்றுலாவை நாம் கொண்டு செல்லவிருக்கிறோம். இந்த முயற்சிகள் அனைத்தையும் நாம் கூட்டாக மேற்கொள்ளும்போது நமது பாரம்பரிய மருத்துவ நடைமுறைகள் நல்ல ஆரோக்கியத்தைத் தருவது மட்டுமின்றி 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கான வளத்தையும் உருவாக்கும். விருது பெற்ற அனைவரையும் மீண்டும் ஒருமுறை நான் பாராட்டுகிறேன்.
நன்றி.
**************
जब हम देश में 1.5 लाख हेल्थ एंड वेलनेस सेंटर खोल रहे हैं, तो आयुष को भूले नहीं हैं।
— PMO India (@PMOIndia) August 30, 2019
देशभर में साढ़े 12 हज़ार आयुष सेंटर बनाने का भी लक्ष्य है, जिसमें से आज 10 आयुष हेल्थ एंड वेलनेस सेंटर्स का उद्घाटन हुआ है।
हमारी कोशिश है कि ऐसे 4 हजार आयुष सेंटर इसी वर्ष तैयार हो जाएं: PM
आयुष्मान भारत योजना के तहत जितने मरीजों को अब तक मुफ्त इलाज मिला है, वो अगर इसके दायरे में ना होते तो उन्हें 12 हज़ार करोड़ रुपए से अधिक खर्च करने पड़ते।
— PMO India (@PMOIndia) August 30, 2019
एक प्रकार से देश के लाखों गरीब परिवारों के 12 हज़ार करोड़ रुपए की बचत हुई है: PM
Prevention और Affordability के साथ देश में इंफ्रास्ट्रक्चर पर तेजी से काम चल रहा है। 2 दिन पहले ही सरकार ने 75 नए मेडिकल कॉलेज बनाने का भी फैसला लिया है।
— PMO India (@PMOIndia) August 30, 2019
इससे गंभीर बीमारियों के इलाज के लिए सुविधाओं में बढ़ोतरी तो होगी ही, साथ ही MBBS की करीब 16 हज़ार सीटें बढ़ेंगी: PM
सिर्फ मॉर्डन मेडिसिन ही नहीं, आयुष की शिक्षा में भी अधिक और बेहतर प्रोफेशनल्स आएं, इसके लिए आवश्यक सुधार किए जा रहे हैं।
— PMO India (@PMOIndia) August 30, 2019
आयुष ग्रिड का आइडिया भी प्रशंसनीय है। इससे आयुष सेक्टर से जुड़े अनेक silos को दूर करने में मदद मिलेगी: PM
आज हम देखते हैं कि जिस भोजन को हमने छोड़ दिया, उसको दुनिया ने अपनाना शुरु कर दिया।
— PMO India (@PMOIndia) August 30, 2019
जौ, ज्वार, रागी, कोदो, सामा, बाजरा, सांवा, ऐसे अनेक अनाज कभी हमारे खान-पान का हिस्सा हुआ करते थे।
लेकिन ये हमारी थालियों से गायब हो गए।
अब इस पोषक आहार की पूरी दुनिया में डिमांड है: PM