பி.எம்.இந்தியா
ரயில்வே துறையில் இந்தியா – ஸ்வீடன் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேற்கொள்வது தொடர்பாக 2016 பிப்ரவரி 15ம் தேதி கையொப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பின்னோக்கி அமலாக்க, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
பின்வரும் பிரிவுகளில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
1) ரயில்வே கொள்கை மேம்பாடு, நெறிமுறைகள், கழகம் மற்றும் ஒவ்வொரு நாட்டின் குறிப்பிட்ட பண்புகள் ஆகியவை இலக்கு.
2) தொழில்நுட்ப நிபுணர்கள், கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம், அறிவு, நிலையான தீர்வு, ஆராய்ச்சி முதலியவற்றை பகிர்ந்து கொள்ளுதல்.
3) குளிர் பிரதேசங்களில் ரயில் சரக்குகளை கையாள்வது, ரயில்கள், ரயில் பெட்டிகள் தடம் புரளாமல் விபத்தை தடுப்பது, திறன் ஒதுக்கீடு (நேர அட்டவணை) மற்றும் பராமரிப்பு தேர்வு முறை மற்றும் சரக்கு, இணைந்த போக்குவரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பிற ஒத்துழைப்பு திட்டங்களும் மேற்கொள்வதென இரு நாடுகள் இடையே ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
4) ரயில் போக்குவரத்து முறையை பராமரிக்க, ரயில்வே இன்ஜினியர்கள், மேலாளர்களுக்கு நம்பகத்தன்மையான பயிற்சி மற்றும் தொடர்ந்து கல்வி திட்டங்கள் செயல்படுத்துதல்.
பின்னணி:
ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் பல்வேறு வெளிநாட்டு அரசுகள் மற்றும் மாநில ரயில்வே துறைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதில், அதிவேக தண்டவாளங்களை அமைப்பது, தற்போதுள்ள வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது, உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக மேம்படுத்துவது, கனரக சுமை செயல்பாடுகள் மற்றும் ரயில் கட்டமைப்புகளை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் ஒத்துழைப்பை பெறுவது என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒத்துழைப்பானது, ரயில்வே தொழில்நுட்பம், இயக்கம், அறிவை பகிர்தல், தொழில்நுட்ப வருகைகள், பரஸ்பர ஆர்வமுள்ள பிரிவுகளில் பயிற்சி, பயிலரங்கம், கருத்தரங்கம் போன்ற மேம்பாட்டு பிரிவுகளில் தகவல்களை பரிமாறிக் கொள்வதும் ஆகும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது, இந்திய ரயில்வே, ரயில்வே துறையில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் தகவல்களை பகிர்ந்து கொள்ளவும், ஆலோசிக்கவும் வழித்தடத்தை ஏற்படுத்தித் தரும். இது தவிர, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது, தொழில்நுட்ப நிபுணர்களை பகிர்ந்து கொள்வது, அறிக்கைகள், தொழில்நுட்ப தகவல்கள், குறிப்பிட்ட தொழில்நுட்ப துறை குறித்த பயிலரங்கம், கருத்தரங்கம் மற்றும் பயிற்சி மற்றும் பிற ஆலோசனைகளுக்கும் அறிவை பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றுக்கும் வழி வகுக்கும்.