பி.எம்.இந்தியா
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ரயி்ல்வே பாதுகாப்பு தொடர்பாக இந்தியா-ஜப்பான் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு, செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒத்துழைப்பு கடந்த, கடந்த பிப்ரவரி 2017-ல் கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், கீழ்க்காணும் பகுதிகளில் இருதரப்புக்கும் ஒத்துழைப்பு ஏற்படும்:
இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம், ரயில்வே துறையில் அதிநவீன வளர்ச்சியையும், புலமையையும் பகிர்ந்துகொள்ளவும், தெரிந்துகொள்ளவும் இந்திய ரயில்வே-க்கு அடித்தளமாக அமையும். இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்பில், கீழ்க்காணும் அம்சங்கள் இடம்பெறும்:
அ. வல்லுநர்களை அனுப்புவது
ஆ. முதன்மை பணியாளர்களுக்கு ஜப்பானில் பயிற்சி
இ. தகவல்களையும், சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்துகொள்தல்
ஈ. மற்ற நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் அமைச்சகங்களின் பங்களிப்புக்கு வழிவகை செய்தல். அதாவது, இந்திய ரயில்வே அமைச்சகத்தின் ஆய்வு வடிவமைப்பு மற்றும் தர அமைப்புக்கு (RDSO), ஜப்பானின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வகம் பங்களிப்பை செய்வது உள்ளிட்டவை அடங்கும். இது, குறிப்பிட்ட நாடுகளின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு, எதையெல்லாம் செய்ய முடியுமோ, அதற்கேற்ப செயல்படலாம்.
****