Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜஸ்தான் மாநிலம் பில்வாடாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார்

ராஜஸ்தான் மாநிலம் பில்வாடாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார்


ராஜஸ்தான் மாநிலம் பில்வாடாவைச் சேர்ந்த இளைஞர் திரு. பல்வந்த் குமாவாட் என்பவரை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.

திரு. குமாவாட், திரு. நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கு வர வேண்டும் என்று விரும்பியவர். இரண்டாண்டுகளுக்கு முன்னர், திரு. நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்கும் வரையில் காலணிகளை அணியப் போவதில்லை என்றும் அதன் பின்னர் தான் அவரை சந்திக்க இருப்பதாகவும் உறுதி ஏற்றிருந்தார். அதன்பின் அவர் காலணி ஏதும் அணியவில்லை.

பிரதமரை சந்தித்த பின்னர் அவர் காலணியை மீண்டும் அணியத் தொடங்கினார். நாட்டின் வளர்ச்சிப் பாதைக்காக ஆற்றலை செயல்படுத்த வேண்டும் என்று திரு. குமாவட்டிற்கு பிரதமர் அறிவுரை வழங்கினார். உடலை வருத்தும் வகையில் எவ்விதமான உறுதியையும் ஏற்கக்கூடாது என்று திரு. குமாவட்டிற்கு பிரதமர் மேலும் அறிவுரை வழங்கினார்.