Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராணி கெய்டன்லியூவின் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்களை பிரதமர் துவக்கி வைத்தார்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சிறப்புமிகு பாரம்பரியத்தை இந்திய மக்கள் நினைவுகூற வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். சுதந்திரப் போராட்டத்தின் மூலம் நமக்குக் கிடைத்த பெருமைகளையும், சுதந்திரப் போராட்ட வீரர்கள் அடைந்த வெற்றிகளையும் நாம் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார். ராணி கெய்டன்லியூவின் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்களையொட்டி, நாணயம் ஒன்றை வெளியிட்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, ராணி கெய்டன்லியூவை நாம் சரியானபடி நினைவு கூறவில்லை என்றும் அல்லது நாம் அவரை மறந்துவிட்டோம் என்றும் கூறினார்.

ராணி கெய்டன்லியூ இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகத்தான பணியை ஆற்றியுள்ளார் என்று கூறிய பிரதமர், அவரை மக்கள் ‘ராணி-மா’ என்று அழைத்தார்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிராக இவர் நடத்தியப் போராட்டங்கள் இந்திய ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டையும் குறிக்கும் வகையிலும் இருந்தன என்றார். வடகிழக்குப் பகுதியில் மகாத்மா காந்தியின் கொள்கைகளை பரப்பிய பெருமையும் ராணி கெய்டன்லியூவை சாரும் என்றார்.

இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் பல ஆண்டுகள் அவர் தனது கிராமத்திற்கே செல்ல முடியாத நிலமையும் இருந்தது என்றும் பிரதமர் வருத்தத்துடன் குறிப்பிட்டார். இந்தியா அரசர்களாலோ, ஆட்சியாளர்களோ உருவாகவில்லை என்றும், மக்களால்தான் உருவானது என்றும் பிரதமர் அப்போது தெரிவித்தார்.

இயற்கையுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ‘ராணி-மா’ கூறிய கருத்துக்கள் இன்று உலகில் தட்பவெட்ப நிலை மாற்றங்கள் குறித்த பிரச்சினைகளுக்கு தகுந்த பதில் அளிக்கும் வகையில் உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

வடகிழக்குப் பகுதியின் மேம்பாட்டுக்கு அரசு எடுத்த முயற்சிகள் குறித்தும் அவர் அப்போது பேசினார். வடகிழக்குப் பகுதியில் ஏற்படும் முன்னேற்றம் நாட்டின் மொத்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும், வங்காள தேசத்துடன் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் இந்தப் பகுதியில் தொடர்பை மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். சமீபத்தில் நாகாலாந்து அமைப்புகளுடன் ஏற்பட்ட அமைதிக்கான ஒப்பந்தம் குறித்து அவர் கூறுகையில், இந்தியாவை கடந்த காலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடிந்தது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் நாகாலாந்து ஆளுநர் திரு பி.வி. ஆச்சாரியா, நாகாலாந்து முதலமைச்சர் திரு. டி.ஆர். ஜெலியாங், மணிப்பூர் மாநில முதலமைச்சர் திரு. ஐபோபி சிங், மத்திய அமைச்சர்கள் திரு. ராஜ்நாத் சிங், திரு. அருண் ஜேட்லி, திரு. மகேஷ் சர்மா, மற்றும் டாக்டர் ஜித்தேந்திர சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

•••••••