பி.எம்.இந்தியா
ரியாத்தில் அமைந்துள்ள எல் அண்ட் டி நிறுவன ஊழியர்களின் குடியிருப்புகளை பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பார்வையிட்டார். ரியாத் நகரில் மெட்ரோ கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களில் எல் அன்ட் டியும் ஒன்று.
அந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அந்த திட்டத்துக்கு அவர்கள் பங்களிப்பை குறிப்பிட்டு, “உங்களின கடின உழைப்பே என்னை இங்கே அழைத்து வந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் இந்தியர்கள் ஆற்றும் பணி, இந்தியாவுக்கு வருவயை பெருக்குவதோடு, நற்பெயரையும் ஈட்டித் தருவதாக பிரதமர் குறிப்பிட்டார். உலகின் பல பகுதிகளில் பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக, இந்தியர்கள் அன்போடு நினைவுகூரப் படுகிறார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார். வருங்காலத்தில், கட்டி முடிக்கப்பட்ட ரியாத் மெட்ரோவும், இந்தியர்களின் நினைவலைகளோடு இருக்கும் என்றார் பிரதமர்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் குறித்து, அவர்களின் உறவினர்கள் அவருக்கு எழுதும் கடிதங்கள் மூலமாக தெரிந்து கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டார். அக்கடிதங்கள் மூலமாக அவர்களின் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வதாக பிரதமர் தெரிவித்தார். “நான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே உணருகிறேன்” என்றார் பிரதமர்.
வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களுக்காக மத்திய அரசின் “ஈ மைக்ரேட்” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். “தொழிலாளர் ஆதார வள மையங்கள்” மேலும் பல உருவாக்கப்படும் என்ற பிரதமர், இதற்காக செயல்படுத்தப்படும் “மதத்” என்ற இணையதளம் மூலமாக மத்திய அரசை உடனடியாக தொடர்பு கொள்ள முடியும் என்றார். உலகிற்கு தேவைப்படும் மனித வளங்களை வழங்கும் நிலையில் இந்தியா இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்
பிரதமரின் வருகைக்காக கூடியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பிரதமர் உரையாற்றுகையில் பல முறை கரகோஷம் எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர். பின்னர், அத்தொழிலாளர்களுடன் பிரதமர் சிற்றுண்டி அருந்தினார்.
Your hardwork draws me here: PM speaks at the L&T workers complex in Riyadh pic.twitter.com/MuPOJpyS1n
— PMO India (@PMOIndia) April 2, 2016
When in the times to come, people will see the work you've done, you will realise the importance of your efforts: PM @narendramodi
— PMO India (@PMOIndia) April 2, 2016
Your happiness is my happiness and when you are not happy, I also feel the pain: PM @narendramodi
— PMO India (@PMOIndia) April 2, 2016
India has the kind of manpower that the world needs today: PM @narendramodi
— PMO India (@PMOIndia) April 2, 2016
Whenever an Indian has faced a difficulty in any part of the world, the Government has helped: PM @narendramodi
— PMO India (@PMOIndia) April 2, 2016
The MEA, the entire team of officials, @SushmaSwaraj ji...they are always helping Indians who face any problems overseas: PM @narendramodi
— PMO India (@PMOIndia) April 2, 2016
There are forums like MyGov & 'Narendra Modi Mobile App' through which you can reach me & I can communicate with you: PM @narendramodi
— PMO India (@PMOIndia) April 2, 2016
Eating together, hearing each other's thoughts & experiences...at L&T Workers' Residential Complex in Saudi Arabia. pic.twitter.com/MaiXqTJ3Cm
— Narendra Modi (@narendramodi) April 2, 2016
Visit to L&T Workers' Residential Complex gave me the opportunity to meet workers whose hardwork will impact generations to come.
— Narendra Modi (@narendramodi) April 2, 2016
Talked about why India is best placed to cater to the global demands for skilled manpower. https://t.co/rvOJhjzKyg
— Narendra Modi (@narendramodi) April 2, 2016