Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் வாழ்த்து


ரியோவில் நடைபெற்றுவரும் 2016ம் ஆண்டுக்கான பாராலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, வெண்கலப்பதக்கம் வென்ற வருண் சிங் பதி ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாரியப்பன், வருண் சிங் ஆகிய இருவருமே ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில், பதக்கம் வென்றுள்ளனர்.

இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தியா பெருமையடைகிறது! ரியோ 2016 பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றதற்காக மாரியப்பன் தங்கவேலுவுக்கும், வெண்கலப் பதக்கம் வென்றதற்காக வருண் சிங் பதி-க்கும் என் வாழ்த்துகள்,” என்று தெரிவித்துள்ளார்