Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லண்டன் கில்டுஹாலில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து வர்த்தக கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் வாசகம்

லண்டன் கில்டுஹாலில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து வர்த்தக கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் வாசகம்

லண்டன் கில்டுஹாலில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து வர்த்தக கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் வாசகம்

லண்டன் கில்டுஹாலில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து வர்த்தக கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் வாசகம்


மாண்புமிகு திரு டேவிட் கேமரூன் அவர்களே,

மரியாதைக்குரிய லண்டன் மாநகர மேயர் திரு ஆலன் யாரோ அவர்களே,

சீமாட்டிகளே, சீமான்களே,

இந்த மாலைப் பொழுதில் உங்களுடன் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த மாபெரும் நாட்டிற்கு நான் பயணப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது நான் ஏற்றுக்கொண்டாக வேண்டும். ஆனால், நானும் மாண்புமிகு திரு கேமரூன் அவர்களும் தொடர்ந்து சந்தித்து பேசி வந்திருக்கிறோம் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

நாங்கள் பல்வேறு இடங்களில் அடிக்கடி சந்தித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கிறோம். இறுதியாக நியூயார்க்கில் நாங்கள் சந்தித்தது நன்றாக நினைவிருக்கிறது. அச்சமயம் அவர் இந்தியாவும், இங்கிலாந்தும் பொருளாதாரத் துறையில் நெருங்கி உழைக்க வேண்டும் என்று சரியாக சொல்லியிருந்தார்.

நண்பர்களே,

பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கிலாந்தும், இந்தியாவும் ஒன்றையொன்று நன்கு அறிந்தவை. நமது இருநாடுகளின் ஆட்சி அமைப்பு முறையும் பெரும்பாலும் வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியில் அமைந்தவை.

 நமது நாடுகளின் நிறுவனங்கள ஒன்றுடன் ஒன்று பேச்சு நடத்துவது பற்றி நன்கு அறிந்தவை.

 நமது இருநாட்டு மக்கள் ஒருவருடன் ஒருவர் சேர்ந்து உழைப்பதை நன்கு அறிந்தவர்கள்.

 நமது வர்த்தகம் ஒன்றுடன் ஒன்று இணைந்து வளர்வதை நன்கு அறிந்தது.

இதன் காரணமாகத்தான் இங்கிலாந்து இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளிகளில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் மிக அதிக அளவு முதலீடு செய்துள்ள மூன்றாவது நாடாகும் இங்கிலாந்து. முதலீடு எனும்போது அது ஒருபக்கம் சார்ந்ததாக இல்லாமல் இங்கிலாந்தில் செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு முதலீடுகளில் இந்தியாவினுடையது மூன்றாவது பெரிய அளவிலானது என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும். இந்தியாவும். இங்கிலாந்தும் தங்களது பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன.

நம்மிடையே உள்ள பரஸ்பர புரிந்துணர்வை நாம் மேலும் திறம்பட பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கிலாந்து எந்தந்தெந்த துறைகளில் வலுவாக உள்ளதோ அவற்றையெல்லாம் இந்தியாவில் மேம்படுத்திக் கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் உள்ளோம். இங்கிலாந்துடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு உகந்த சூழ்நிலைகளை உருவாக்க பாடுபட்டு வருகிறோம். இங்கிலாந்தில் உள்ள பெரும் எண்ணிக்கையிலான இந்திய சமுதாயத்தினர் அதனுடனான இந்தியாவின் ஒருங்கிணைப்பை மேலும். மேலும் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

நண்பர்களே,

எனது அரசு பதவியேற்ற பிறகு பொருளாதாரத்தை மீண்டும் வேகம் பெறச் செய்வதற்கு ஓய்வின்றி உழைத்து வருகிறோம். குறிப்பாக இந்தியாவை எளிமையாக வர்த்தகம் செய்யக்கூடிய இடம் என்ற நிலையை உருவாக்க கடுமையாக பாடுபட்டு வருகிறோம். இந்தியாவின் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்த இது மிகவும் அவசியமானது என நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் கடின உழைப்பின் பலன் இப்போது கண்கூடாக தெரிய வந்துள்ளது. உலக பொருளாதாரத்தில் இன்று இந்தியா ஒருசில பிரகாசமான இடங்களில் ஒன்றாக மிளிர்கிறது என்று சர்வதேச பண நிதியத்தின் தலைவர் சமீபத்தில் குறிப்பிட்டுள்ளார். சென்ற ஆண்டு எமது வளர்ச்சி வீதம் 7 புள்ளி 3 சதவீதமாக இருந்தது.

சமீபத்தில் உலக வங்கி இந்தியாவின் இந்த ஆண்டு வளர்ச்சிவீதத்தை 7 புள் 5 ஆக கணித்திருக்கிறது. வரும் ஆண்டுகளில் இது மேலும் உயரும் என்று அது தெரிவித்திருக்கிறது.

இவ்வகையில் நாங்கள் சரியான திசையில் பயணப்பட்டு இருப்பது எங்களது அதிர்ஷ்டமாகும். 2016 ஆம் ஆண்டு வர்த்தகம் பிரிவதில் எளிமை தொடர்பான உலகவங்கி அறிக்கையில் இந்தியா தரவரிசையில் 12 புள்ளிகளுக்கு ஒரே சமயத்தில் உயர்ந்துள்ளது. எந்த ஒரு நாடும் இந்த அளவுக்கு ஒரே சமயத்தில் முன்னேற்றத்தை பதிவு செய்ததில்லை.

இத்தகைய முன்னேற்றத்தை மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் நகர நிலைகளுக்கு எடுத்துச் செல்வதில் உறுதியுடன் இருக்கிறோம். மாநிலங்கள் இந்த வகையில் ஒத்துழைப்பு மற்றும் போட்டியிடும் சமஷ்டி அமைப்பு அடிப்படையில் மத்திய அரசுடன் நெருங்கி ஒத்துழைத்து வருகின்றன.

உலக வங்கி குழுவின் உதவியுடன் எளிமையாக வர்த்தகம் செய்வதில் நாட்டின் மாநிலங்களை வரிசைப்படுத்தும் நடவடிக்கையை சமீபத்தில் மேற்கொண்டோம். இதனால், மாநில அரசுகளுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டு வர்த்தகம் புரிவதில் நட்புறவுடன் கூடிய பொருளாதார நிலைமையை ஏற்படுத்தி வருகின்றன.

எளிமையாக வர்த்தகம் செய்யும் அமைப்புகளை ஆய்வு செய்வதில் உலக வங்கி முதல் முறையாக மாநிலங்கள் அளவில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர்களை ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்துவது இன்றைய நிலையில் இந்தியா சந்தித்து வரும் பெரிய சவாலாகும். இந்த சவாலை எதிர்கொள்ள உற்பத்தி துறையை பெரிதும் முன்னேற்ற வேண்டும். தற்போது இந்த்த் துறை பல பத்தாண்டுகளாக உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 16 சதவீத அளவிலேயே நின்றுவிட்டுருக்கிறது. இந்த பங்கு குறுகிய காலம் அல்லது நடுத்தர காலத்திற்குள் 25 சதவீதமாக உயர வேண்டும். இதனை கருத்தில் கொண்டு மேக் இன் இண்டியா திட்டத்தை தொடங்கியுள்ளோம். இந்தியாவை உலக உற்பத்தி மையமாக உருவாக்குவதில் அனைத்து துறைகளிலும் உழைத்து வருகிறோம்.

இந்த நோக்கத்தை அடைய வர்த்தகம் செய்வதில் எளிமை என்ற நிலையை உருவாக்கும் தீவிர முயற்சிகளுடன் தொழில்களுக்கும் அடிப்படை வசதி திட்டங்களுக்கும் அனுமதி வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்தியிருக்கிறோம். கொள்கை அடிப்படையிலான நிர்வாகம் என்பதே எங்கள் அணுகுமுறையாக உள்ளது. வெளிப்படையான ஏலம், இயற்கை ஆதாரங்களான நிலக்கரி, அலைக்கற்றை, இரும்புத்தாது ஆகியவற்றை ஒதுக்கீடு செய்வது போன்ற நடவடிக்கைகள் முதலீட்டாளர்களிடையே சம வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாட்டு முதலீடுகள் வருவதை உயர்த்த இது தொடர்பான நடைமுறைகளை தாராளமாக்கியுள்ளோம், ரயில்வேயில் 100 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் காப்பீட்டு துறைகளில் அந்நிய நேரடி முதலீடு வரம்பு 49 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போது, இறுதிப்பகுதியில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து நாங்கள் நன்கு அறிந்துள்ளோம். இந்த அடிப்படையில் சென்ற வாரம் 15 துறைகளில் அந்நிய நேரடி முதலீடு தொடர்பான விதிமுறைகளில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

உதாரணமாக, கட்டுமானத்துறையில் அந்நிய நேரடி முதலீடு கொள்கையைப் பொறுத்தவரை ஏறக்குறைய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை எனும் நிலை உள்ளது. இதேபோல மலைத் தோட்டத் துறை, மின்னணு வர்த்தகம், ஒற்றை வர்த்தகச் சின்னம் உள்ள சில்லரை வர்த்தகம் ஆகிய துறைகளில் மிகவும் அடிப்படையான தாராளமயமாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அந்நிய நேரடி முதலீட்டு திட்டங்களை தானே செயல்படும் நேரடி வழிப்பாதையின் கீழ் கொண்டு வந்துள்ளோம்.

இந்தச் சுற்று சீர்திருத்தங்களுடன் வெளிநாட்டு முதலீடுகளைப் பொறுத்தவரை இந்தியா மிகவும் திறந்த நாடுகளில் ஒன்றாக ஆகிவிட்டது என்று நான் கூறமுடியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை அடிப்படை வசதி மற்றுமொரு சவாலாகும். எதிர்காலத்தை கருதிய கட்டுமானங்கள், சமூக அடிப்படை வசதிகளை உருவாக்குவதில் ஆர்வமாக உள்ளோம். நிதி நிர்வாகத்தில் சுயமாக விதித்துக் கொண்ட ஒழுங்கு கட்டுப்பாட்டின்படி, அடிப்படை வசதி துறைக்கு அதிக ஆதாரங்களை ஒதுக்க இயன்றுள்ளது. மேலும் இந்தியா முதலீடு மற்றும் அடிப்படை நிதியத்தை உருவாக்கி வருகிறோம். எங்களது சொந்த ஆதாரங்களில் இருந்து 35 லட்சம் அமெரிக்க டாலர் அளவுக்கு இந்த நிதியத்திற்கு ஆண்டுதோறும் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். சொத்துக்கள் நிர்வாகத்துக்கென நிபுணத்துவ குழு ஒன்றை ஏற்படுத்தி வருகிறோம்.

ரயில்வே, சாலை மற்றும் இதர துறை திட்டங்களில் வரியில்லா அடிப்படை வசதி பத்திரங்களை வெளியிடும் திட்டமும் உள்ளது. இங்கிலாந்து அரசு, தொழில்துறை மற்றும் நிதிச்சந்தையுடன் சிறந்த உழைப்பு, இந்தியாவின் அடிப்படை வசதி துறையில் நம்மிடையே உள்ள உறவுகளையும் ஆர்வத்தையும் வளர்த்துக் கொள்ள பாடுபடுவோம். விரைவில் இந்த பத்திரங்கள் நமது இருநாடுகளின் நிதிச் சந்தைகளுக்கு இடையே வலுவான ஆவணங்களாக அமையும்.

நண்பர்களே,

எமது வரி விதிமுறைகள் வெளிப்படையாகவும், முன்னோக்கிச் செல்லக் கூடியவையாகவும் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். உண்மையான முதலீட்டாளர்களுக்கும், நேர்மையாக வரி செலுத்துபவர்களுக்கும் வரி சம்பந்தப்பட்ட விசயங்களில் நியாயமான விரைந்து முடிவுகள் கிடைக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்கிறோம்.

எங்கள் முயற்சிகளின் பலனாக

• வெளிநாட்டு முதலீடு உள் வருவது மற்றும் தனியார் முதலீடு தொடர்புடைய மக்களின் கருத்துகள் நேர்மறையாக மாறியுள்ளன.

• சென்ற ஆண்டு இதே காலத்தை விட தற்போது வெளிநாட்டு நேரடி முதலீடு 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

• எர்னஸ்ட் மற்றும் யங் நிறுவனம் இந்தியாவை மிகுந்த கவர்ச்சிவாய்ந்த முதலீட்டு இடமாக அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டின் பசுமைக்கான முதலுட்டு இடங்களின் முன்நிலை வரிசையில் இந்தியாவிற்கு முதலிடம் தந்துள்ளது.

• அமெரிக்காவின் வெளிவராக் கொள்கை சஞ்சிகை அந்நிய நேரடி முதலீட்டுக்கு இந்தியா முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

• ஃப்ராஸ்ட் மற்றும் சல்லிவான் நிறுவனம் 100 நாடுகளிடையே மேற்கொண்ட ஆய்வில் வளர்ச்சி, புதுமை பாடத்தால் மற்றும் தலைமைப் பண்புக்கு இந்தியா முதலிடம் என அறிவித்துள்ளது.

• யு.என்.சி.டி.எ.டி. எனும் ஐ.நா. அமைப்பு வெளியில் முதலீட்டுக் கவர்ச்சித் தன்மை தரவரிசைப் பட்டியலில் இந்தியா 15லிருந்து 9வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

• உலகப் பொருளாதார அமைப்பின் உலகளாவிய போட்டியிடும் தன்மை குறியிட்டு எண்ணில் இந்தியா 16 இடங்கள் முன்னேறியுள்ளது.

• ‘மூடி’ நிறுவனம் இந்தியாவின் தரத்தை ‘நேர்மறையானதாக’ உயர்த்தியுள்ளது.

இவ்வாறு 18 மாத காலத்தில் உலக முதலீட்டாளர்களிடையே தனது நம்பகத் தன்மையை உயர்த்திக் கொண்டுள்ளது இந்தியா. பி.பி.பி. எனப்படும் பொதுத்துறை தனியார்துறை ஒத்துழைப்பு மூலம் முன்பு பொதுத்துறை மட்டுமே ஏற்றிருந்து துறைமுகம் முதலீட்டு நிலை தனியாருக்கு திறந்து விடப்பட்டுள்ளது. சந்தை ஒழுங்குமுறையை கொணர பொதுத்துறை பங்குகளை விற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பி.பி.பி. திட்டங்களை அமைத்து அமல்படுத்துவதில் உங்கள் அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ள ஆர்வமாய் உள்ளோம்.

அனைத்து புதுமைப்படைப்பாளர்கள், தொழில்முனைவோரின் அறிவுசார் சொத்து உரிமைகளை பாதுகாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது என்பதைப் பற்றி உங்களுக்கு உறுதியளிப்பதுடன் எனக்கும் இதில் அக்கறை உள்ளது எனத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐ.பி. நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை மற்றும் ஆன்-லைன் நடைமுறை அதிக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். விரிவான தேசிய அறிவுசார் சொத்துரிமை கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது.

நண்பர்களே!

எங்கள் கனவுகளை நனவாக்க உங்கள் தீவிர ஈடுபாட்டை வேண்டுகிறேன். இலக்கை விரைவாகவும் திறம்படவும் அடைவதற்கான எங்கள் உறுதிப்டும் தீவிரமும் இங்கிலாந்து நிறுவனங்களுக்கு பெரிய வாய்ப்புக்களை வழங்கியுள்ளன. இந்த வாய்ப்புகளில், 5 கோடி வீடுகளை கட்டுதல், 100 அதிநவீன நகரங்களை உருவாக்குதல், ரயில்வே கட்டமைப்பு நவீன மயமாக்கல், புதிய ரயில் பாதைகளில் நிலையங்களை அமைத்தல், தேசிய நெடுஞ்சாலை மற்றும் பாலங்கள் அமைத்தல், மெட்ரோ ரயில் கட்டமைப்பு ஆகியன அடங்கியுள்ளன. அடிப்படை வசதி உருவாக்கத்திற்கும், பொருள் உற்பத்திக்கும் இவ்வளவு பெரிய வாய்ப்பு வேறு எந்த நாட்டிலும் கிடைக்காது. மேலும், மிக முக்கியமாக, பயன்பாட்டிற்கும், நுகர்வுக்கும் இவ்வளவு பெரிய வாய்ப்பு உலகில் வேறெங்கும் இல்லை.

எங்களது கொள்கைகள் மற்றும் மக்களின் பலத்தில் நாங்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்த முயற்சி எடுத்துள்ளோம். டிஜிட்டல் இந்தியா, திறன் இந்தியா போன்ற இயக்கங்கள் இந்த நடைமுறையில் ஈடுபட மக்களை தயார் செய்ய உதவுகிறது. இவர்களது திறத்தை நன்கு பயன்படுத்த தொடங்கிடு இந்தியா (Start up India’) திட்டத்தை தொடங்கியுள்ளோம். சமீபகாலமாக புதிய நிறுவனங்கள் தொடங்குவது பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. இவற்றில் சில நெடுங்காலமாகச் செயல்படும் நிறுவனங்களுக்கு சவால் விடுவதாக வளரத் தொடங்கியுள்ளன.

நண்பர்களே!

இந்தியா மாபெரும் தகவல் தொழில்நுட்ப புரட்சியின் நுழைவாயிலில் உள்ளது. எனது 125 கோடி மக்களுக்கான சேவைகளை துரிதப்படுத்த இதனை பயன்படுத்த உள்ளோம். புதிய தொழில்நுட்பங்களும், புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியுமே எனது தாரக மந்திரம். நாங்கள் எதைச் செய்தாலும் அதனை பசுமையான தூய்மையான வகையில் செய்வோம். எரிசக்தி திறன்மிக்க பயன்பாடு, நதிகளைத் தூய்மையாக்கி மீண்டும் பயன்படுத்துதல், தூய்மையான எரிசக்தி நதிகளைத் தூய்மைப்படுத்துதல் நமது முயற்சிகளில் சில. இவற்றில் கூடுதல் முதலீட்டிற்கும் மனித ஆற்றல் பயன்பாட்டுக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

துடிப்புள்ள இளைஞர்கள், வளர்ந்துவரும் நடுத்தர வகுப்பு மக்கள் அதிகமாகக் கொண்டது நமது நாடு. இந்தியாவில் மிகப் பெரிய உள்நாட்டுச் சந்தை உள்ளது. மூன்று டி-க்கண்ட அதாவது ஜனநாயகம், மக்கள் தொகை மற்றும் தேவைகள் ஆகியவை நமது பலம். மேலும் இந்தியாவின் திறன் மிக்க இளைஞர்கள் இப்போது சவால்களைச் சந்திக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் விரும்பி தொழில் முனைவோராக வர முயற்சி எடுக்கின்றனர். இவ்வாறாக நாம் டி-யிலிருந்து ஈ-க்கு அதாவது தொழில் முனைவுத் தன்மைக்கு முன்னேறியுள்ளோம்.

நண்பர்களே!

இந்தியப் பொருளாதாரம் உயர்ந்து பறப்பதற்கான தேவையான நிபந்தனைகள் உருவாக்கப்பட்டுவிட்டன. முன் எப்போதுமில்லாத வகையில் தற்போது இந்தியா திறன்களையும், தொழில்நுட்பத்தையும் ஆற்றிய மூலதனத்தையும் ஈர்த்துக் கொள்ளும் தயார்நிலையில் உள்ளது. வரும் நாட்களில் நிலைமை மென்மேலும் சிறந்ததாக ஆகிவரும். உங்கள் கருத்துக்களையும், புதுமைகளையும் நிறுவனங்களையும் வரவேற்க தயாராக உள்ளோம். எனது கொள்கைகளிலும் நடைமுறைகளிலும் தேவையான மாற்றங்களை செய்வதில் திறந்த மனதுடன் உள்ளோம். பிரதமர் திரு. கேமரூனின் நெடுநோக்கும் துடிப்பான தலைமையும் இருக்கும்போது இங்கிலாந்து அரசுடனும், நிறுவனங்களுடனும் ஒத்துழைக்கத் தனிப்பட்ட முறையில் ஆர்வமாக உள்ளேன்.

இந்த வார்த்தைகளுடன் உங்களை இந்தியாவிற்கு வரவேற்கிறேன். உங்கள் கனவுகள் நனவாக எனது தனிக்கவனம் உண்டு என உறுதி கூறுகிறேன். உங்களில் பலர் இந்தியாவுக்குச் சொந்தமானவர்கள். பலர் ஏற்கனவே இந்தியாவில் உள்ளீர்கள். அங்கே இல்லாதவர்களுக்குச் சொல்லச் சொன்னதை விரும்புகிறேன்.

• இன்றைய நிலையில் இந்தியாவில் இருப்பது புத்திசாலித்தனமானது.

• நாங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை எளிதாக்கி வருகிறோம்.
மேலும்

• ‘இந்தியாவில் தயாரிப்பது’ என்பதை மேலும் நன்றாகச் செய்வோம்; நான் சொல்வதை நம்புங்கள்.

நன்றி, மிக்க நன்றி.

*****