Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லாபத்தைப் பங்கிட்டுக் கொள்வதற்கான ஒப்பந்த முறையின் கீழ் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் மற்றும் இந்திய எண்ணெய்க் கழகம் ஆகியவற்றுக்குச் சொந்தமான, இதுவரை பணமாக்கப்படாத 60 எண்ணெய் இருப்புக் கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கப்பட்ட சிறு பகுதிகளுக்கான ஒப்பந்தம் கோரும் 11வது சுற்றில் முன்வைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் கண்டுபிடிக்கப்பட்ட சிறு பகுதிகளுக்கான ஒப்பந்தம் கோரும் 11வது சுற்றின் கீழ் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் மற்றும் இந்திய எண்ணெய்க் கழகம் ஆகியவற்றுக்குச் சொந்தமான, இதுவரை பணமாக்கப்படாத 60 எண்ணெய் இருப்புக் கண்டுபிடிப்புகளை ஏலத்தில் முன்வைப்பதற்காக 14.10.2015 அன்று அறிவிக்கை செய்யப்பட்ட கண்டுபிடிக்கப்பட்ட சிறு பகுதிகளுக்கான கொள்கையை மேலும் நீட்டிப்பதற்கான தனது ஒப்புதலை வழங்கியது. கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பகுதிகளில் 22 இடங்கள் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்திற்கும், 5 இடங்கள் இந்திய எண்ணெய்க் கழகத்திற்கும் சொந்தமானவை. 12 இடங்கள் புதிய கண்டுபிடிப்பு மற்றும் உரிமம் வழங்குவதற்கான கொள்கையின் கீழுள்ள பகுதிகளில் 21 இடங்கள் மீண்டும் ஒப்பளிக்கப்பட்ட பகுதிகள் ஆகும். இவைபோக, கண்டுபிடிக்கப்பட்ட சிறு பகுதிகளை ஏலம் விடுவதற்கான முதல் சுற்றில் போதிய முதலீட்டாளர்கள் முன்வராத நிலையில் உரிமம் வழங்கப்பட இயலாதவை ஆகும்.

விவரங்கள்:

இந்தக் கண்டுபிடிப்புகள் 194.65 மில்லியன் டன் எண்ணெய் அல்லது அதற்கு இணையான இயற்கை எரிவாயுவைக் கொண்டவை என மதிப்பிடப்பட்டுள்ளன.

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பினை மேம்படுத்தும் வகையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க இந்த இடங்கள் வளர்த்தெடுக்கப்பட்டு விரைவில பணமாக்கப்படும்.

இந்தப் பகுதிகளில் செய்யப்படும் முதலீட்டின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாவும், தூண்டுதலாகவும் 80,000க்கும் மேலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இத்தகைய ஏலச்சுற்றுகளை நடத்தும் வகையில் இந்தக் கொள்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட சிறிய பகுதிகளுக்கான இரண்டாவது சுற்று ஏலத்திற்கான கோருதல்களை கோரும் அறிவிப்பு மற்றும் இதர ஆவணங்களையும், வருவாயை பகிர்ந்து கொள்வதற்கான முன்மாதிரி ஒப்பந்தம் ஆகியவற்றை (பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறையின்) செயலாளர், (செலவுத் துறை) செயலாளர் மற்றும் சட்டத் துறை செயலாளர் ஆகியோரை உள்ளடக்கிய செயலாளர்களின் அதிகாரம்பெற்ற குழு இறுதிப்படுத்தும்.

அதிகாரம் பெற்ற செயலாளர்கள் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோரால் இந்த ஒப்பந்தங்களை வழங்க அனுமதி அளிக்கப்படும்.