பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் வாஷிங்டன் டிசியில் அமைந்துள்ள புவியீர்ப்பு விசை குறித்த ஒளிக்கற்றை அலைக்குறுக்கீட்டுமானி ஆய்வக விஞ்ஞானிகள் குழு ஒன்றை கடந்த வியாழன் அன்று சந்தித்து உரையாடினார். தேசிய அறிவியல் அறக்கட்டளை இயக்குநர் டாக்டர். ஃப்ரான்ஸ் கொர்டோவா தலைமையிலான இந்த விஞ்ஞானிகள் குழுவில் இந்த லிகோ திட்டத்தில் பணிபுரிந்த மூன்று இளம் இந்திய விஞ்ஞானிகளும் அடங்குவர்.
லிகோ திட்டத்திற்கு இந்தியா எவ்வளவு மிக முக்கியமானது என்பது குறித்து டாக்டர். கொர்டோவா விளக்கினார். இந்திய-அமெரிக்க விஞ்ஞான கூட்டுறவிற்கு இந்த லிகோ திட்டம் மிகச் சிறந்ததொரு உதாரணம் என்று பிரதமர் குறிப்பிட்டதோடு, இந்தத் திட்டத்தின் வெற்றியானது இந்திய விஞ்ஞானிகளில் ஒரு புதிய இளம் தலைமுறையினருக்கும் உத்வேகமூட்டுவதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். இந்த லிகோ திட்டத்தில் பங்கு பெற்றுள்ள இந்திய விஞ்ஞானிகள் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு இந்திய மாணவர்களுடன் உரையாடுமாறும் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு வருகை தரும்படியும் பிரதமர் அவர்களை கேட்டுக் கொண்டார்.
இதே லிகோ திட்டத்தில் ஈடுபட்டு வரும் புதுதில்லியில் உள்ள பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகளை சந்தித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு பிரதமர் வாஷிங்டன் டிசியில் லிகோ ஆய்வில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகளை சந்தித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தருணத்தில் புவியீர்ப்பு விசை குறித்த ஒளிக்கற்றை அலைக்குறுக்கீட்டுமானி ஆய்வகம் ஒன்றை இந்தியாவில் ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் பிரதமரின் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை இயக்குநர் டாக்டர். ஃப்ரான்ஸ் கொர்டோவா. இந்திய அணுசக்தித் துறையின் செயலாளர் டாக்டர். சேகர் பாசு ஆகியோர் அதற்கு முந்தைய தினத்தில்தான் கையெழுத்திட்டிருந்தனர்.
*****
Insightful interaction with scientists from LIGO, including 3 young Indian scientists who worked on LIGO project. pic.twitter.com/dlEUjZzrc4
— Narendra Modi (@narendramodi) March 31, 2016
LIGO project is a great example of India-USA ties & will surely inspire several young science enthusiasts in India. https://t.co/hdoiykgtWy
— Narendra Modi (@narendramodi) March 31, 2016