Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த நாள் அன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் லோக்தந்த்ர பிரகாரி அபினந்தன் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்வார்; மும்பைக்கு பிரதமர் பயணம் மேற்கொண்டு டாக்டர் அம்பேத்கர் நினைவு மண்டபத்திற்கான அடிக்கல்லை நாட்டுவார்


புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் லோக்தந்த்ர பிரகாரி அபினந்தன் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளைக் கலந்துக் கொள்வார். இந்நிகழ்ச்சி பாரத் ரத்னா லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணின் பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மும்பைக்கும் பிரதமர் பின்னர் பயணம் மேற்கொள்வார்.

சைத்திய பூமியில் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கருக்கு அவர் மரியாதையை செலுத்தினார். இந்து மில்ஸ் வளாகத்தில் அம்பேத்கரின் நினைவு மண்டபத்திற்கான அடிக்கல்லை நாட்டும் கல்வெட்டை திறந்து வைப்பார்.

ஜவகர்லால் நேரு துறைமுகத்தில் நான்காவது கொள்கலன் முனையம் மற்றும் இரண்டு பெரு நகர ரெயில் வழித்தடங்கள் ஆகியவற்றிக்கும் அடிக்கல்லையும் பிரதமர் நாட்டுவார். பாண்ட்ரா-குர்லா வளாகத்தில் உள்ள மும்பை பெரு நகர மேம்பாட்டு ஆணையத்தின் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது கூட்டத்திலும் பிரதமர் உரையாற்றுவார்.

***