Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வங்காளதேசத்தில் நிலச்சரிவு காரணமாக உயிரிழப்பு நிகழ்ந்த சம்பவம் குறித்து பிரதமர் வேதனை


வங்காளதேசத்தில் நிகழ்ந்த நிலச்சரிவு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார். வங்காளதேசத்துடன் இந்தியா இந்த தருணத்தில் துணையிருப்பதை உணர்த்தும் வகையில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை தேடும் முயற்சி மற்றும் மீட்புப் பணிகளில் உதவத்தயாராக இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

“வங்காளதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழப்பு நிகழ்ந்தது குறித்து வேதனை அடைகிறேன். எனது எண்ணங்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருடன் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

இந்த தருணத்தில் வங்காள தேசத்துடன் இந்தியா தோளோடு தோள் நிற்கிறது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை தேடும் பணியிலும் மீட்புப் பணியிலும் உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்”. என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

****