பி.எம்.இந்தியா
வங்காள விரிகுடா பன்முக தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் குற்றவியல் விவகாரங்களில் சட்டபூர்வ ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் (பீம்ஸ்டெக்) கையெழுத்திடுவதற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஒப்பந்தத்தின் 15வது ஷரத்தின்படி, மத்திய உள்துறை இதற்கான மத்திய அதிகார மையமாக இருக்கும். வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மியான்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பீம்ஸ்டெக் அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும்.
குற்றவியல் நடைமுறைகளில் பிராந்திய நாடுகளிடையே ஒத்துழைப்பை மேற்கொள்வது குற்றவியல் நடவடிக்கைகளை தடுக்க பெரிதும் உதவும். இந்த ஒப்பந்தம் குற்றவியல் நடவடிக்கைகளில், குறிப்பாக தீவிரவாதம், மாபியா குற்றங்கள், போதைப் பொருள் குற்றங்கள், பண மோசடி, இணைய குற்றங்கள் போன்றவற்றை தடுக்கவும், புலனாய்வில் உதவி செய்யவும், உறுப்பு நாடுகள் பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்க பெரிதும் உதவும். இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, ஏற்பளித்த பிறகு, இந்த ஒப்பந்தத்தின் பத்திரம், பீம்ஸ்டெக் அமைப்பின் செயலரிடம் கொடுக்கப்படும். அனைத்து நாடுகளும் ஒப்பந்தப் பத்திரத்தை ஒப்படைத்த 30வது நாளில் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும்.