பி.எம்.இந்தியா
வளர்ச்சி வேலைவாய்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிளாக் ராக் இந்தியா முதலீட்டாளர் கூட்டத்தின் பங்கேற்பாளர்களுக்கு விருந்து அளித்து பேசியபோது பிரதமர் இதைத் தெரிவித்தார். பிரதமர் மேலும் தெரிவித்ததாவது:-
அரசின் செயல்முறை, வெளிப்படை தன்மை, வரி விதிப்பு ஆகிய துறைகளில் உலகளவில் இந்தியா தனி இடம் பிடக்க வேண்டும் என்பதை நான் முக்கியமாக கருதுகிறேன். உலகளவில் இந்தியாவின் மேல் உள்ள ஆர்வம் அதிகரித்து வருகிறது. நாம் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்கட்டமைப்பு வளர்ச்சி சிறந்த வழியாகும். உள்கட்டமைப்பில் விரிவாக்கமும் புதுப்பித்தலும் அவசியமாகும். ரயில்வே பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் சக்தியாக மாறலாம். 2022க்குள் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டமும் பொருளாதாரத்திற்கு பெரிய ஊக்குவிப்பாக இருக்கும். இந்தியாவின் தேவை மட்டுமின்றி உலக தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் அரசு திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் உலக தரம் வாய்ந்த கல்வி முறை இருக்க வேண்டும். வேலை வாய்ப்பு உருவாக்குபவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் மீது கவனம் செலுத்தும் வகையில் திறன் வளர்ச்சித் திட்டங்கள் இந்தியாவில் இருக்க வேண்டும்.
வளர்ச்சிக்கு வழிவகுக்கும் நியாமான, கணிக்க கூடிய, திடமான வரி முறையிலும் பொருளாதார திட்டங்களிலும் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்திய முதலீட்டாளர்கள் சந்திப்பில் 21 முக்கிய முதலீட்டாளர்கள் கலந்துக் கொண்டனர். சொத்து மேலாளர்கள், காப்பீட்டாளர்கள், ஓய்வூதிய நிதி, அதிகாரப்பூர்வமான நிறுவனங்கள் ஆகியவை நிறுவன முதலீட்டாளர்கள் பட்டியலில் அடங்கும்.
இந்திய முதலீட்டாளர்கள் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த பிளாக் ராக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைவர் திரு. லாரன்ஸ்சையும் மத்திய நிதி அமைச்சகத்தையையும் பிரதமர் பாராட்டினார். இந்த விருந்தில் மத்திய அமைச்சர்கள் திரு. அருண் ஜேட்லி, திரு. நிதின் கட்காரி, திரு. சுரேஷ் பிரபு, திரு. தர்மேந்திர பிரதான், திரு. பியூஷ் கோயல், திரு. ஜெயந்த் சின்ஹா ஆகியோர் கலந்துகொண்டனர்.