Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வானொலி மற்றும் தொலைக்காட்சித் துறையில் இந்தியாவுக்கும், வெளிநாட்டு ஒலி / ஒளிபரப்பாளர்களுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


வானொலி மற்றும் தொலைக்காட்சித் துறையில் இந்தியாவுக்கும், வெளிநாட்டு ஒலி / ஒளிபரப்பாளர்களுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

பயன்கள்:

1) அரசு ஒலி / ஒளிபரப்பு நிறுவனங்கள் புதிய பார்வைகளைப் பெறுதல்,

2) புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கடுமையான போட்டிகளை எதிர்கொள்ள புதிய உத்திகளை உருவாக்குதல்,

3) ஊடகத் தாராளமயம்,

4) உலகமயம் ஆகியவற்றுக்கு வெளிநாட்டு ஒலி / ஒளிபரப்பாளர்களுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உதவும்.

**************