Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வாரணாசி மற்றும் லக்னோவிற்கு பிரதமர் நாளை பயணம்


பிரதமர் திரு. நரேந்திர மோடி வாரணாசி மற்றும் லக்னோவிற்கு நாளை பயணம் மேற்கொள்ள உள்ளார்.

வாரணாசி சென்றடைந்தபின் பிரதமர் திவ்யஞான் சாஷாத்திரிகரன் சமரோ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி பொருட்களும் உதவும கருவிகளும் வழங்கப்படும்.

லக்னோவில், பாபாசாகிப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக் கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரையாற்ற உள்ளார்.

அதன்பிறகு பாரதி மைக்ரோ கிரிடிட் ஏற்பாடு செய்துள்ள மின்னனு ரிக்ஷா விநியோக நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

அம்பேத்கர் மகா சபாவில் பிரதமர், பாபாசாகிப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்துவார்.