Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வாஷிங்டன் டிசி-யில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடல்

வாஷிங்டன் டிசி-யில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடல்

வாஷிங்டன் டிசி-யில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் கலந்துரையாடல்


வாஷிங்டன் டிசி-யில் இந்திய சமூகத்தினருடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசும்போது, “இந்தியாவிலிருந்து நல்ல செய்தி வரும்போதெல்லாம், இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். இந்தியா புதிய உச்சத்தை அடைய வேண்டும் என்று விரும்புகின்றனர்,” என்றார். அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் அளித்துவரும் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார். இந்திய மக்கள் தற்போது வாய்ப்புகளையும், நல்ல சூழ்நிலையையும் பெற்று வருவதாக பிரதமர் தெரிவித்தார். விரைவில் அவர்கள், இந்தியாவை மாற்றிக் காட்டுவார்கள் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசு மீது எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டும் வரவில்லை என்பதை பிரதமர் குறிப்பிட்டார்.

ஊழலைக் குறைப்பதில் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு குறித்து பிரதமர் பேசினார். நேரடி மானியத் திட்டத்தின் பயன்களை விவரித்த பிரதமர், இது மானியத்தை, உரியவர்களுக்கு சிறந்த முறையில் கிடைக்கச் செய்ய உதவும் என்றும், முறைகேடுகளை மிகப்பெரிய அளவில் தடுத்து விடுவதாகவும் தெரிவித்தார். சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை விட்டுக் கொடுத்த குடும்பங்களுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். 5 கோடி ஏழை மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு கொடுக்க வேண்டும் என்ற தனது கனவையும் எடுத்துரைத்தார். “வளர்ச்சியடைந்த இந்தியா குறித்து நான் சிந்திக்கும்போது, ஆரோக்கியமான இந்தியாவை சிந்திக்கிறேன். குறிப்பாக, நமது நாட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்,” என்றார் பிரதமர்.

தொழில்நுட்ப அடிப்படையிலான ஆளுமையின் மூலம், நவீன இந்தியா உருவாக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார். உரிய கொள்கைகள் மற்றும் ஆளுமை பின்பற்றப்படும்போது, இந்திய மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும் என்று பிரதமர் தெரிவித்தார்.

தீவிரவாதம் குறித்து பேசிய பிரதமர், இதனால் ஏற்படும் அச்சுறுத்தலை உலகம் தற்போது உணர்ந்துகொண்டுள்ளதாக தெரிவித்தார். இந்த சூழ்நிலையில், அண்மையில் இந்தியா நடத்திய துல்லிய தாக்குதல் குறித்தும் பிரதமர் பேசினார்.

உலகம் முழுவதும் நெருக்கடியில் தவித்துவரும் மக்களுக்கு உதவுவதில் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பங்களிப்பை, குறிப்பாக வெளியுறவு அமைச்சர் திருமதி. சுஷ்மா ஸ்வராஜின் செயல்பாடுகளை பிரதமர் வெகுவாக பாராட்டினார்.