விஜயதசமி நன்னாளையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் தமது வாழ்த்துகளை
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (20.10.2026)
தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி, நம்பிக்கை ஆகியவற்றின் இந்த மங்களகரமான விழா, அனைவரின் உறுதிக்கும் புதிய வலிமையை ஊட்டும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம், வெற்றி ஆகியவை நிறைந்த வாழ்க்கை அமைய வேண்டும் என திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“விஜயதசமி நல்வாழ்த்துகள். மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்த இந்த வெற்றித் திருவிழா, அனைவரின் மனவுறுதிக்கும் புதிய வலிமையைத் தரட்டும். அனைவரின் வாழ்வும் மகிழ்ச்சி, நல்ல அதிர்ஷ்டம், வெற்றியால் வளம் பெறட்டும் என்பதே என் விருப்பம்.”
(Release ID : 2325351)
****
SK/PLM/SH
आप सभी को विजयादशमी की अनंत शुभकामनाएं। उल्लास और विश्वास का यह विजय पर्व हर किसी के संकल्प को नई शक्ति प्रदान करे। सभी का जीवन सुख-सौभाग्य और सफलता से समृद्ध हो, यही कामना है।
— Narendra Modi (@narendramodi) October 20, 2026