Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விண்வெளியில் கூட்டு முயற்சிக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து அமைதிவழி தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக இந்தியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் வரம்புகள் பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் தகவல் தெரிவிப்பு


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விண்வெளியில் கூட்டு முயற்சிக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து அமைதிவழி தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக இந்தியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் வரம்புகள் பற்றி தெரிவிக்கப்பட்டது. வரம்புகள் குறித்த இந்த ஒப்பந்தம் 2016 செப்டம்பர் 03 ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது.

விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பயன்பாடுகள் குறித்த விஷயங்களில் ஒத்துழைப்புக்கு சாத்தியமான அம்சங்களைக் கண்டறிவதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இதில் பூமிப்பரப்பின் மீது தொலை உணர்வு திறன் பயன்படுத்துதல்; செயற்கைக்கோள் மூலமான தொலை தொடர்பு மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையிலான கடல் வழி சேவை; விண்வெளி அறிவியல் மற்றும் கிரகங்கள் குறித்த ஆய்வு; விண்கலம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் தரையில் உள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல்; விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் ஆகியவையும் இதில் அடங்கும்.

இந்த வரம்புநிலை ஒப்பந்தத்தின் மூலம் வியட்நாமுடன் ஒத்துழைப்பு மேற்கொள்வது, மனிதகுல நலனுக்காக விண்வெளி தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்த துறையில் கூட்டு செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு உதவியாக அமையும்.

பூமிப் பரப்பின் மீது தொலை உணர்வு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது; செயற்கைக்கோள் மூலமான தொலைத்தொடர்பு; செயற்கைக்கோள் அடிப்படையிலான கடல் வழி சேவை; விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளிப் பகுதியில் ஆய்வு மேற்கொள்வது ஆகிய துறைகளில் புதிய ஆராய்ச்சி செயல்பாடுகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் முயற்சிக்கு, இந்த ஒப்பந்தம் மூலமாக உத்வேகம் கிடைக்கும்.