பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்கு பிப்ரவரி 2019–ல் வீட்டு வசதித் துறையில் இந்தியா மற்றும் சவூதி அரேபியா இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இருநாடுகளின் வீட்டுவசதித் துறை மற்றும் குறைந்த வருமான பிரிவினர்களுக்கு வீட்டு வசதியை மேம்படுத்தி, இருநாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள வீட்டு வசதி மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களில் அலுவலர்களும், நிறுவனங்களும் பங்கேற்பதை அதிகரிக்கும்.