Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு தேவைப்படும் அனைத்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் அளிக்கப்படும் – பிரதமர் உறுதி


உத்தர பிரதேசம், பீகார், உத்தராகண்ட், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு தேவைப்படும் அனைத்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளும் வழங்கப்படும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனிற்காக பிரார்த்தனை செய்த பிரதமர், வெள்ள பாதிப்பு இடங்களில் விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“உத்தர பிரதேசம், பீகார், உத்தராகண்ட், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனிற்காக நான் இறைவனை வேண்டுகிறேன்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்கள் இந்த மானிலங்களில் நிலவி வரு சூழ்நிலையை கூர்ந்து கவனித்து வருகிறார். மேலும் அவள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாநில முதல் அமைச்சர்களுடன் தொடர்பு கொண்டு மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அறிந்து வருகிறார்.

தேவையான அனைத்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளப்படும். வெள்ள பாதிப்பு இடங்களில் விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று நான் நம்புகிறேன்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

****