Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக உஸ்பெகிஸ்தான் புறப்படும் முன் பிரதமர் அளித்த அறிக்கை


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ.) மாநாட்டில் பங்கேற்பதற்காக அரசு பயணமாக உஸ்பெகிஸ்தான் புறப்படும் முன் பிரதமர் திரு. நரேந்திர மோடி அளித்த அறிக்கை :

“எஸ்.சி.ஓ. மாநாட்டில் பங்கேற்பதற்காகவும் எஸ்.சி.ஓ.வில் பங்கேற்கும் நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடவும் நான் உஸ்பெகிஸ்தான் செல்கின்றேன்.

எஸ்.சி.ஓ.-வில் உறுப்பினராக உள்ளதில் இந்தியா பெருமை அடைகிறது. எஸ்.சி.ஓ. மூலம் அனைத்து துறையிலும் குறிப்பாக பொருளாதார ஒத்துழைப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

மத்திய ஆசிய பகுதிகளில் உள்ள நாடுகளுடனான உறவிற்கு இந்தியா பெரும் முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த பகுதிகளில் பொருளாதாரம் மற்றும் மக்களுக்கிடையே உள்ள உறவுகள் மேலும் வலுவடைய முயற்சிக்கிறோம்”